வாழ்க்கை தான் நம் சிரிப்பை நிர்ணயிக்கிறது.. தத்துவம் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ்புத்தாண்டை தனது லால்சலாம் படக்குழுவினருடன் கொண்டாடி உள்ளார்.
18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா, தனுஷ் தம்பதியினர் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது மகன்களுடன் ரஜினிவீட்டில் வசித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் : தனுசை பிரிந்ததால் மன அழுத்தத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா தற்போது அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளார். இந்த வயதில் கணவரை பிரிந்து வாழ்வது பெரிய துயரமான ஒன்றாக இருந்தாலும் மகளுக்கு பக்க பலமாக அப்பா ரஜினியும், அம்மா லதாவும் இருக்கிறார்கள். அதே போல தனுஷின் மகன் யாத்ரா இந்த வயதிலேயே அப்பா,அம்மாவின் மனநிலையை புரிந்து கொண்டு இருவர் இடத்திலும் சமமான அன்பை பொழுந்து வருகிறார்.

லால் சலாம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் த்ரி, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய நிலையில், தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமா வைத்து உருவாகி வரும் இப்படத்தில், விஷ்ணு விஷால்,விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் ஆகியோர் இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர். தனது மகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு : லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுயடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள். இப்படத்தை 2023ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதால், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
என் உலகம், என் குடும்பம் : இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டை தனது லால் சலாம் படக்குழுவினருடன் கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து என் உலகம், என் குடும்பம், நம் வாழ்க்கை தான் நம் சிரிப்பை நிர்ணயிக்கிறது என்ற கேப்ஷன் போட்டுள்ளார். இதில் ஐஸ்வர்யாவின் மகன்களான யாத்ரா, லிங்கா இருவரும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











