எல்லா அப்பாவும் சூப்பர் ஸ்டார் தான்.. சூப்பர் ஸ்டாரே அப்பாவா கிடைச்சா.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போஸ்ட்!

சென்னை: அன்னையர் தினம், மகளிர் தினம் கொண்டாடப்படுவதை போல தந்தையர் தினம் பெரிதாக கொண்டாடப்படுவதில்லை. ஆனால், சமீப காலமாக மகள்கள் தந்தையர் தினத்தை பெரிதாக கொண்டாட ஆரம்பித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தந்தையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1981 ஆம் ஆண்டு லதாவை திருமணம் செய்து கொண்டார். இன்று வரை அவரை பிரியாமல் அவருடன் வாழ்ந்து வருகிறார். திருமணமான ஒரே வருடத்தில் 1982 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தார். அதன் பின்னர் 1984 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்தும் பிறந்தார்.

Rajinikanth Aishwarya Rajinikanth Fathers Day Lal Salaam Vettaiyan Coolie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகன் வாரிசு இல்லை என்றாலும் இரு மகள்களுமே இயக்குநர்களாக மாறி தமிழ் சினிமாவில் தங்கள் ஆளுமையை செலுத்தி வருகின்றனர்.

தந்தையர் தினம்: "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்" என்கிற ஸ்டேட்டஸை போட்டு காலையிலேயே பலரும் தந்தையர் தினத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தந்தையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஸ்ருதிஹாசன் கமல்ஹாசனின் பயோபிக் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்பாவுடன் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் தந்தை ராமோஜி ராவ் கெயிக்வாட் உடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் தந்தையர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. 73 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அவரது மகள்கள் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து: உலகில் உள்ள எல்லா அப்பாக்களும் அவர்களின் குழந்தைகளுக்கு முதல் சூப்பர் ஸ்டார் தான் என்றாலும், ரியல் சூப்பர் ஸ்டாரையே தந்தையாக கொண்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்றைய தினத்தை சும்மா விடுவாரா? என்பது போல மறக்காமல் தனது தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து அவருடன் எடுத்துக் கொண்டு சில பிரத்தியேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

என் இதயத் துடிப்பு: My heartbeat.. my all ...love you appa என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தைக்கு தந்தை தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைபடத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு அந்த திரைப்படம் பெரிதாக போகாத நிலையில் இன்னமும் ஓடிடியில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அப்பா ரஜினிகாந்தின் பயோபிக்கை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இமயமலையில் எடுத்ததா?: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கும் அந்த பிரத்யேக புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமீபத்தில் இமய மலைக்கு சென்ற போது எடுத்த புகைப்படமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தலையில் குல்லா, ஸ்வெட்டர் எல்லாம் போட்டுக் கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். காரில் அமர்ந்தபடி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த புகைப்படத்தில் போஸ் கொடுத்துள்ளார். கணவர் தனுஷை விவாகரத்து செய்து விட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது தங்கையை போல இன்னொரு திருமணத்தை செய்துக் கொள்வாரா? என்கிற கேள்விகள் எழுந்து வருகின்றன. விரைவில் தனது அடுத்த படத்தை ஆரம்பிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X