விநாயகர் சதுர்த்திக்கு முன்னாடி வெறித்தனமான வொர்க்கவுட்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வேறலெவல் போங்க!
சென்னை: 42 வயதாகும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் புதிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியர்க்க வைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், கடந்த 2022ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒருவரையொருவர் பிரிவதாக மனப்பூர்வமாக அறிவித்தனர். லிங்கா மற்றும் யாத்ராவை மட்டுமின்றி ரஜினிகாந்தையும் இவர்களின் திடீர் பிரிவு பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

நடிகர் தனுஷை பிரிந்து வாழ ஆரம்பித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்து லால் சலாம் படத்தை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.
தனுஷ் - ஐஸ்வர்யா இயக்கம்: நடிகர் தனுஷும் மனைவியை பிரிந்த பின்னர் ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். மேலும், தனது சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து தனுஷ் இயக்கி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் விரைவில் ரிலீஸாக காத்திருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலரை வைத்து கிரிக்கெட் கதையை மையப்படுத்தி இயக்கிய லால் சலாம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெளியானது.

லாஸ் ஆன லால் சலாம்: தனுஷை வைத்து 3, கெளதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதன் பின்னர் பல ஆண்டுகள் படங்களை இயக்காமல் இருந்து வந்தார். மீண்டும் இயக்கத் தொடங்கிய அவருக்கு ஆதரவாக அப்பா ரஜினிகாந்த் கேமியோவாக நடித்த லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறி பெரிய லாஸை லைகா நிறுவனத்துக்கு கொடுத்தது. வேட்டையன் படம் வெற்றிப் பெற்றால் தான் அந்த இழப்பில் இருந்து லைகா மீளும் என்கின்றனர். இந்தியன் 2 திரைப்படமும் லைகாவை பெரிதும் ஏமாற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.
வெறித்தனமான வொர்க்கவுட்: விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு முன்னதாக வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். லால் சலாம் படத்திற்கு பிறகு அடுத்து எந்த படத்தை இவர் இயக்கப் போகிறார். இவர் இயக்கத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
ஆழ்வார்ப்பேட்டை ஜிம்: ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அயன் ட்ரைப் ஜிம்மில் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தினமும் வொர்க்கவுட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உடல் ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை செலுத்தி வருவதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வொர்க்கவுட் வீடியோக்களை வெளியிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காட்டி வருகிறார். செளந்தர்யா ரஜினிகாந்த் போல இவரும் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்வாரா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தனுஷ் உடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











