வெற்றிக்கோப்பையுடன் ரஜினி பேரன்கள்.. அம்மா ஐஸ்வர்யா செம ஹேப்பி.. அப்பா தனுஷ் வரலையா?
சென்னை: இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன்கள் ஓட்டப் பந்தயத்தில் ஓடி வெற்றிக் கோப்பையை ஜெயித்துள்ள நிலையில், அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்தின் பேரன்களும் தனுஷின் மகன்களும் விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்றதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
பள்ளியில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சியில் நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டியில் லிங்கா மற்றும் யாத்ரா ஓடி வரும் காட்சிகளையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு
கடந்த 2004ம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு
போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ள நிலையில், அதன் அருகேயே நடிகர் தனுஷ் பிரம்மாண்ட வீடு கட்ட திட்டமிட்ட நிலையில், அதன் பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். ஆனால், தனது மகளை தனுஷ் பிரிந்த நிலையில், சமீபத்தில் 150 கோடி ரூபாய்க்கு தனுஷ் கட்டிய பிரம்மாண்ட வீட்டின் புதுமனை புகு விழாவில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் மகன்கள் என யாருமே கலந்து கொள்ளவில்லை.

வெற்றிக் கோப்பையை வென்ற ரஜினி பேரன்கள்
யாத்ரா மற்றும் லிங்கா இருவரது பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தின ஓட்டப் பந்தயப் போட்டியில் இருவரும் ஓடிய புகைப்படங்களையும், வெற்றிக் கோப்பையுடன் அண்ணன் மற்றும் தம்பி இருவரும் சந்தோஷமாக சிரிக்கும் காட்சிகளையும் ஸ்டில்லாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

வெயிலில் ஓட்டம்
தனது மகன்கள் வெயிலை எல்லாம் பொருட்படுத்தாமல் ஓடி வெற்றிக் கோப்பையை பெற்றுள்ளனர் என்பதை குறிக்க, "No amount of sun..could stop these kids' spirit of sportsmanship fun.. They ran and tan in the morning sunshine.. While I stood there basking and smiling at my sons shine #sportsday #aboutlastmorning #sons " என்கிற கேப்ஷனையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

அப்பா தனுஷ் வரலையா
சமீபத்தில் நடைபெற்ற வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் தனுஷ் உடன் அவரது மகன்கள் சென்றிருந்தனர். இந்நிலையில், மகன்கள் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை கண்டு ரசிக்கவும் மகன்களை உற்சாகப்படுத்தவும் நடிகர் தனுஷ் வரவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேப்டன் மில்லரில் பிஸி
சமீபத்தில் நடைபெற்ற வாத்தி படத்தின் வெற்றி விழாவுக்கு கூட போகாமல் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ள நிலையில், விளையாட்டுப் போட்டிகளை கண்டு ரசிக்க நடிகர் தனுஷால் நேரம் ஒதுக்க முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











