Lal Salaam - ரஜினிக்கு இப்படி ஒரு ஆசையா?.. நிறைவேற்றிய மகள் ஐஸ்வர்யா.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: Lal Salaam (லால் சலாம்) லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் ரஜினியின் ஆசையை அவர் நிறைவேற்றிவிட்டார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிரது.

தனுஷுடனான திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கிவருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார்.

Aishwarya Rajinikanth shares Lal Salaam Shooting Spot pictures in her instagram

மொய்தீன் பாய் ரஜினி: லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக இருப்பது ரஜினிகாந்த். அப்படத்தில் அவர் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். இருப்பினும் படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 50லிருந்து 60 நிமிடங்கள்வரை இருக்கும் எனவும், ரஜினிக்கென்று ஆக்‌ஷன் காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில்தான் மொய்தீன் பாய் கேரக்டரின் போஸ்டர் வெளியானது.

ட்ரோல்களை சந்தித்த மொய்தீன் பாய்: இளம் ஹீரோக்களுடன் ரஜினி நடிப்பதாலும், இஸ்லாமியர் கதாபாத்திரத்தை பல வருடங்களுக்குப் பிறகு அவர் ஏற்றிருப்பதாலும் அவரது லுக் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால் மொய்தீன் பாயின் லுக்கை பார்த்த ரசிகர்கள் அப்செட்டாகி ஐஸ்வர்யாவை கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். இதுவரை வந்ததிலேயே இதுதான் ரஜினிக்கு மோசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்றும் கூறினர்.

அப்செட்டில் ரஜினி: இப்படிப்பட்ட சூழலில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்கு மும்பை சென்றது படக்குழு. சென்ற வாரம் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஏதோ காரணத்தால் படப்பிடிப்பு நடக்கவில்லை. இதனால் அப்செட்டான ரஜினி சென்னை திரும்பினார். இப்போது மும்பையில் அனைத்து சொதப்பல்களும் சரி செய்யப்பட்டுவிட்டதால் மீண்டும் தொடங்கியிருக்கும் ஷூட்டிங்கில் ரஜினி கலந்துகொண்டிருக்கிறார்.

கபில்தேவுடன் ரஜினி: இந்நிலையில் லால் சலாம் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் நடித்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படத்தையும், அறிவிப்பையும் ரஜினிகாந்த்தே தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். இது அனைவருக்கும் பெரும் சர்ப்ரைஸாக இருந்தது.

Aishwarya Rajinikanth shares Lal Salaam Shooting Spot pictures in her instagram

இதற்கிடையே ரஜினிகாந்த் கபில்தேவின் தீவிர ரசிகராம். ஒருமுறை சென்னை வந்த கபில்தேவ் மைதானத்தில் ஓரமாக நின்றுகொண்டிருந்தபோது ரஜினிகாந்த் நேரடியாக மைதானத்துக்குள் சென்று அவருடன் கை குலுக்கியிருக்கிறார். இதன் மூலம் அவர் எவ்வளவு பெரிய கபிலின் ரசிகர் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர்.

ரஜினியின் ஆசை: நிலைமை இப்படி இருக்க கபில்தேவுடன் நடித்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை ரஜினிக்கு ஓரமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இக்கதையும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம் என்பதால் கபில்தேவை ஐஸ்வர்யா எளிதாக உள்ளே கொண்டுவந்துவிட்டார். இதனால் கபில்தேவுடன் ஒரே திரையில் தோன்றப்போகிறோம் என உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறாராம் ரஜினிகாந்த்.

ஐஸர்யா பகிர்ந்த புகைப்படங்கள்: இந்நிலையில் லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ரஜினி, கபில்தேவ், விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோருக்கு காட்சிகளை அவர் விளக்கும்படி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X