ரஜினி பாதி.. தனுஷ் பாதி.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் அடுத்த ஹீரோ ரெடி.. எப்படி வளர்ந்துட்டாரு!
சென்னை: தன்னை விட உயரமாக வளர்ந்து விட்ட தனது மூத்த மகனின் புகைப்படத்தை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரு குழந்தைகள் பிறந்தனர். இரு மகன்களும் நன்றாக வளர்ந்து விட்ட நிலையில், திடீரென தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவை அறிவித்தது இரு மகன்களையுமே அதிகம் பாதித்துள்ளது.

அம்மாவுடன் இரு மகன்களும் இருந்தாலும், அடிக்கடி அப்பா தனுஷின் சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தியேட்டரில் படம் வந்தால் முதல் நாள் முதல் காட்சிக்கும் சென்று வருவதை தொடர்ச்சியாக கொண்டுள்ளனர்.
ரஜினிகாந்த் பேரன்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா என இரு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் இயக்குநர்களாக வலம் வருகின்றனர். அப்பாவை வைத்து ஏற்கனவே செளந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கிய நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூத்த மகன் பார்க்க அப்படியே குட்டி ரஜினிகாந்த் போலவே இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மகன் கிடுகிடுவென வளர்ந்துட்டான்: அப்பா தனுஷின் டிசர்ட்டே போட்டுக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்ட யாத்ராவின் புகைப்படத்தை சற்று முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகன் எப்படி கிடுகிடுவென வளர்ந்து விட்டான் பாருங்க என பதிவிட்டுள்ளார்.
ரஜினி பாதி தனுஷ் பாதி: யாத்ராவை பார்த்த ரசிகர்கள் அப்படியே தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் சாயல் அப்படியே யாத்ராவுக்கு இருக்கிறது என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து புது ஹீரோ உருவாகி விட்டார் என்றும் கூடிய விரைவிலேயே தனது மகனை தனுஷ் இயக்குவாரா? அல்லது அம்மா ஐஸ்வர்யா இயக்குவாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.
அதிதி ராவ் கமெண்ட்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட இன்ஸ்டா போஸ்ட்டை ஏகப்பட்ட பிரபலங்கள் பார்த்து லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகை அதிதி ராவ் மகன் ரொம்ப உயரமாக வளர்ந்துட்டானே என வர்ணித்து கமெண்ட் எல்லாம் போட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











