சினிமாவா.. யோகாவா.. அப்பா வழியில் மகள் ஐஸ்வர்யா தனுஷ்!

சென்னை: தந்தை ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலில் நாட்டம் கொண்ட நிலையில், மகள் ஐஸ்வர்யா தனுஷும் ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் '3' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு வை ராஜா வை படத்தை இயக்கினார். அடுத்தும் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.

Aishwarya Rajinikanth Stepped in spirituality

இதற்கிடையில் சர்வதேச யோகா நிறுவனத்தில் பங்குதாரராகி இருக்கிறார். சர்வா யோகா என்ற இந்த நிறுவனம் சர்வதேச அளவிலானது. இதில் நடிகை மலைக்கா அரோரா, நடிகர் சாஹித் கபூர், பாப் ஸ்டார் ஜெனிபர் லோபஸ் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இதில் ஐஸ்வர்யா தனுசும் பங்குதாரர் ஆகியுள்ளார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறியதாவது: இந்த நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன்.

ஆரோக்கியத்துடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் எங்கள் சிந்தனை செயல்முறைகள் எப்படி சரியாக இணைகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் இருவருடனும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு நினைவூட்ட வேண்டும், என்பது சர்வாவின் குறிக்கோள்.

நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இதுவே. இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார். தந்தையின் வழியில் ஐஸ்வர்யாவும் ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷின் இந்த புதிய முயற்சி அவரது மறு பக்கத்தை காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X