சிங்கிள்தான் பாதுகாப்பு.. தனுஷுடன் இணைய முடியாது என்று சொல்லிட்டாரா ஐஸ்வர்யா?.. ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். ஆனால் முறைப்படி விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐஸ்வர்யா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் ஐஸ்வர்யாவின் இயக்கம் பலரையும் கவர்ந்தது. அதனையடுத்து அவர் இயக்கிய வை ராஜா வை படம் தோல்வியடைந்தது. முதல் இரண்டு படங்களும் அவருக்கு பெயரை பெற்று தரவில்லை. சூழல் இப்படி இருக்க தனுஷுடனான திருமண வாழ்க்கையும் பாதியில் முடிந்தது. இதனால் ஐஸ்வர்யா அடுத்த என்ன செய்யப்போகிறார். அவர் மன அழுத்தத்தில் உழலப்போகிறார் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள்.

Aishwarya Rajinikanth Talks about Her Marriage Life At Latest interview

லால் சலாம்: அவர்களது கணிப்பை தவிடுபொடியாக்கும் விதமாக தனது அடுத்த பட வேலையில் இறங்கினார் ஐஸ்வர்யா. அதன்படி விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரை லீடு ரோலிலும், ரஜினிகாந்த்தை கெஸ்ட் ரோலிலும் வைத்து லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. படமானது கடந்த 9ஆம் தேதி தேதி திரையரங்குகளில் வெளியானது. ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் படம் பார்க்க சென்றனர்.

சுமாரான வரவேற்பு: படத்துக்கு ரசிகர்கள் தங்களது சுமாரான வரவேற்பையே கொடுத்திருக்கிறார்கள். கதைக்களம் சரியாக இருந்தாலும் படத்தில் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது என்றும்; ரஜினிகாந்த்துக்கு வைக்கப்பட்டிருக்கும் மாஸ் காட்சிகள் எல்லாம் அரத பழசான ஸ்டைல் என்றும் ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் டல்லடித்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா பேட்டி: இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கடந்த இரண்டு வருடங்களாகவே என்னை மிகவும் ஆட்கொண்டிருப்பது என்னுடைய தனிமை மட்டும்தான். எனது தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். உண்மையில் இந்த இரண்டு வருடங்களில் நான் என்ன உணர்ந்தேன் என்றால் தனியாக இருப்பவர்கள்தான் பாதுகாப்பான மனிதர்கள் என்பதைத்தான்.

நிறைய பேர் கேட்பார்கள்: போர் அடித்தால் என்ன செய்வீர்கள் என்று நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள். ஆனால் எனக்கு போர் என்றால் என்னவென்றே தெரியாது. அந்த உணர்வை நான் எப்போதும் உணர்ந்ததே இல்லை. எனக்கு தனியாக இருப்பது சௌகரியமான ஒன்றாக இருக்கிறது. வை ராஜா வை திரைப்படத்துக்கு பிறகு நான் பிரேக் எடுத்துக்கொண்டது என்னுடைய குழந்தைகளுக்காகத்தான்.

உலகம் வளர்கிறது: உலகம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. ஒருவர் தனியாக வாழ்க்கையை பார்த்துக்கொள்ளும் சூழ்நிலை மிகவும் எளிதாக இப்போது கிடைக்கிறது. என்னுடைய குழந்தைகள் வளரும் காலத்தை நான் மிஸ் செய்திடக்கூடாது என்று யோசித்தேன். அதனால்தான் வை ராஜா வை படத்துக்கு பிறகு அந்த பிரேக்கை எடுத்துக்கொண்டேன்" என்றார்.

முற்றுப்புள்ளியா?: இதற்கிடையே தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைப்பதற்காக இரண்டு வீட்டார்களும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா இப்போது தனியாக இருப்பதுதான் பாதுகாப்பானது என்று கூறியிருப்பதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை தனுஷுடன் இணைந்து வாழவே முடியாது என்பதை மறைமுகமாக சொல்லி தனது வாழ்க்கையில் தனுஷுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X