அப்பாவோட சொத்து பாதி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்குத்தானா?.. பிறந்தநாளில் அடுத்த பட அறிவிப்பு வருமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1982ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் சேர்த்தே தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருகிறார். பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கானின் சொத்து மதிப்பு 6000 கோடி ரூபாயாக உள்ளது. நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு 4000 கோடி என்கின்றனர். ஆனால், ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு அதிகபட்சமாக 450 கோடி ரூபாய் தான் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

aishwarya rajinikanth net worth

சுமார் 1000 கோடி அளவுக்காவது ரஜினிகாந்திடம் சொத்துக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் பாதி தான் அவரிடம் உள்ளது என்கின்றனர். ரஜினிகாந்தின் சொத்துக்கள் அவரது 2 மகள்களுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்படுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா: கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக நடிகர் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். ஜனவரி 1ம் தேதி ரஜினிகாந்த் மற்றும் லதாவுக்கு மகளாக பிறந்த ஐஸ்வர்யா இன்று 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் தனுஷ் தனது முன்னாள் மனைவிக்கு வாழ்த்து சொல்வாரா? என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

aishwarya rajinikanth net worth

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொத்து மதிப்பு: நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரது ஒட்டுமொத்த சொத்துக்கள் 280 கோடி ரூபாயாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், அவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு 240 கோடி ரூபாய் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொத்து மதிப்பு 40 கோடி ரூபாயாகவும் உள்ளது. தமிழ் சினிமாவில் பெண் இயக்குநராக வலம் வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு அவருடைய அப்பா ரஜினிகாந்த் இன்னும் சில ஆண்டுகளில் சொத்துக்களை எழுதி வைப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அடுத்த படம் எப்போ?: கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்க எந்த ஹீரோ தலையை கொடுப்பார் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. தனுஷ் ராயன், இட்லி கடை, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என வரிசையாக படங்களை இயக்கியும் நடித்தும் வரும் நிலையில், கூடிய விரைவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த புராஜெக்ட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

aishwarya rajinikanth net worth

மகன்களுடன் கொண்டாட்டம்: நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ள நிலையில், இன்று அப்பாவை சந்தித்து பிறந்தநாள் கொண்டாடுவாரா ஐஸ்வர்யா என்பது சந்தேகம் தான் என்கின்றனர். தனது மகன்களான லிங்கா மற்றும் யாத்ராவுடன் இந்த பிறந்தநாளை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தோஷமாக கொண்டாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீக்கிரமே பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்கள் வெளியாகும் என்றும் தங்கை செளந்தர்யா ரஜினிகாந்த் தனது அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X