Ajith - அஜித் ரசிகர்களால் அப்செட்டான ரஜினியின் மகள்?.. என்ன ஏகே ஃபேன்ஸ் இதெல்லாம் நியாயமா?
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு ரோலில் நடித்திருக்கும் திரைப்படம் லால் சலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த சூழலில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வசூல் ரீதியாக படம் அடி வாங்கினாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக முதல் பட இயக்குநர்போன்று ஐஸ்வர்யாவின் மேக்கிங் இல்லை. அனுபவப்பட்ட இயக்குநர் இயக்கியது போல் இருந்தது என்று ரசிகர்கள் பேசினார்கள். அதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படமும் தோல்வியையே சந்தித்தது.

லால் சலாம்: இதற்கிடையே சில காரணங்களால் தனது கணவர் தனுஷை பிரிந்தார் ஐஸ்வர்யா. இந்த சூழலில் அவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். கெஸ்ட் ரோல் என்றாலும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வரை அவர் படத்தில் இருப்பார் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
இசை வெளியீட்டு விழா: படமானது பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று ஐஸ்வர்யாவும், ரஜினிகாந்த்தின் ரசிகர்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். நிலவரம் இப்படி இருக்க படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடந்தது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஐஸ்வர்யா பேச்சு: விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "எனது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் எனது அப்பாவுக்கு இல்லை. எனக்காக மட்டும் அவர் லால் சலாம் படத்தில் நடிப்பதற்கு கண்டிப்பாக ஒத்துக்கொள்ளவில்லை. படம் சொல்ல வரும் மெசேஜ், தத்துவம் ஆகியவை பிடித்ததால்தான் இதில் நடிப்பதற்கு அவர் ஒத்துக்கொண்டார்.
வருந்திய ஐஸ்வர்யா: லால் சலாம் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும்போதெல்லாம் விடாமுயற்சி அப்டேட் எப்போது வரும், வேட்டையன் அப்டேட் எப்போது வரும் என்று கமெண்ட்ஸ்கள் குவியும். அதையெல்லாம் பார்க்கும்போது நம்முடைய படம் லிஸ்ட்லையே இல்லையே என்று எண்ணம் எனக்கு தோன்றியது. படத்தின் அவுட்புட்டை பார்த்துவிட்டு இப்போது சொல்கிறேன் கண்டிப்பாக எனது படமும் எல்லோருடைய லிஸ்ட்டிலும் இருக்கும்" என்றார்.
விடாமுயற்சி: அஜித் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தையும், ரஜினி நடிப்பில் உருவாகிவரும் வேட்டையன் படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது. இரண்டு படங்களுக்குமே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தாலும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் எப்போதுவரும் என்று சமூக வலைதளங்களில் விழி வைத்து காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அதனால் லைகா தரப்பிலிருந்து வேறு எந்தப் படத்தின் அப்டேட் வந்தாலும் அதில் சென்று விடாமுயற்சி அப்டேட் கொடுங்கள் என்று கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அவர்கள். அதுதான் லால் சலாம் அப்டேட் வந்தபோதும் நடந்தது. அந்த விஷயம்தான் ஐஸ்வர்யாவை அப்செட்டாக்கிவிட்டது போல..


Click it and Unblock the Notifications











