கோவிலில் திடீர் பூஜை செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..அவர் படம் நல்லா ஓடணும்னு வேண்டியிருப்பாரோ?
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆடி வெள்ளிக்கிழமையான இன்று கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 18 ஆண்டுகள் இணைபிரியாது வாழ்த்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர்.

பிரிந்தனர்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே இருப்பது கருத்து வேறுபாடுதான் இதனால், இருவரும் விரைவில் சேர்த்துவிடுவார்கள் என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், பிரிவு அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம் பாடலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, தனுஷ் மாறன் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியபோதும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.

விரைவில் நல்ல செய்தி
இதையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்து கொள்வதாக கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து, தனுஷின் பிறந்த நாளன்று இருவரும் இணைந்து பிறந்தநாளை கொண்டாட உள்ளதாகவும், குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று இருவரும் சேர்ந்துவிட்டோம் என்று அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோவிலில் வழிபாடு
இந்நிலையில்,ஆடி வெள்ளிக்கிழமையான இன்று ஐஸ்வர்யாக ரஜினிகாந்த், காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்துள்ளார். மேலும் காமாட்சி அம்மன் கோவிலில் தீபம் ஏற்றியும் பரிகாரம் செய்துள்ளார் ஐஸ்வர்யா. இந்த போட்டோக்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்துள்ள ஐஸ்வர்யா, ஆடி வெள்ளி எப்பொழுதும் காப்பாய் காமாட்சி என கேப்ஷன் போட்டுள்ளார்.
Recommended Video

நல்லதே நடக்கும்
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரேமேன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளதால் அந்த படம் நன்றாக ஓடவேண்டும் வழிபாடு நடத்தினீர்களா என்றும், கடவுளில் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்,நல்லதே நடக்கும் தனுஷ் அண்ணனும் விரைவில் சேர்ந்து கோவிலுக்கு செல்ல வேண்டும் என பல ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications