முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. என்ன காரணம் தெரியுமா?.. ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு இருவரும் பிரிந்துவிட்டார்கள். இதனையடுத்து அவர்கள் மீண்டும் இணையப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் மயிலத்தில் அமைந்திருக்கும் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா சாமி தரிசனம் செய்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.
காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை பாராட்டும்போது ஏற்பட்ட பழக்கம் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதலாக மாறியது. பிறகு சில சிக்கல்களை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இருவரின் காதலுக்கு அடையாளமாக யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருமே உச்சக்கட்ட காதலோடு தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருந்தார்கள். முக்கியமாக இரண்டு பேரும் ஒருவரையொருவர் அனுசரித்தும், துணையாகவும் இருந்தனர்.

இயக்குநர் ஐஸ்வர்யா: ஐஸ்வர்யாவுக்கு இயக்குநராகும் ஆசை இருப்பதை தெரிந்துகொண்ட தனுஷ் 3 படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அடுத்ததாக அவர் இயக்கிய வை ராஜா வை படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது. அப்படத்திலும் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படி இருக்க திடீரென இருவரும் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
கரியரில் கவனம்: தனுஷை பிரிந்த பிறகு சில வருடங்கள் எந்தப் படமும் இயக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் லால் சலாம் படம் தியேட்டரில் வெளியானது. ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணமாக ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதை கூறினார் ஐஸ். அது பெரும் ட்ரோலுக்கு உள்ளானது. மேலும் இன்றுவரை லால் சலாம் ஓடிடியிலும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இணைகிறார்கள்: தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேரப்போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. குடும்ப நல நீதிமன்றத்தில் அவர்களது விவாகரத்து மனு விசாரணைக்கு வந்தபோது இரண்டுபேருமே மூன்று முறை ஆஜராகவில்லை. அதுமட்டுமின்றி ரஜினிகாந்த்தின் உடல்நிலையாலும், அவருக்கு நிம்மதி வேண்டும் என்பதாலும் தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு ஐஸ்வர்யா முடிவு செய்துவிட்டதாகவும்; விரைவில் அந்த அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முருகன் கோயிலில் தரிசனம்: இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மயிலம் பகுதியில் இருக்கும் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா சாமி தரிசனம் செய்தார். மன நிறைவுக்காகவும், நிம்மதிக்காகவும் இந்தக் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இதனையடுத்து ஐஸ்வர்யாவின் தரிசனத்தை பார்த்த ரசிகர்களோ, தனுஷுடன் மீண்டும் இணையவிருப்பது ஐஸ்வர்யாவுக்கு நிறைவையும், நிம்மதியையும் தரும். அதனால்தான் அவர் இந்தக் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்திருப்பாரோ என்று தங்களது கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











