அண்ணாமலையார் தரிசனம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் இருந்து வெளியிட்ட போட்டோ!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்பாவை போலவே ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்த நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் அதிரடியாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களையும் குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

கணவரை பிரிந்த நிலையில், மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

அப்பாவை இயக்கும் ஐஸ்வர்யா

அப்பாவை இயக்கும் ஐஸ்வர்யா

நடிகர் தனுஷின் 3 மற்றும் கவுதம் கார்த்திக்கின் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை விவாகரத்து செய்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தை இயக்கி வருகிறார். லால் சலாம் என்கிற டைட்டிலில் உருவாகி வரும் அந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோவாக நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் அந்த படத்தில் நாயகர்களாக நடிக்க கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி படம் உருவாகி வருவதாக கூறுகின்றனர்.

கோயில் கோயிலாக

கோயில் கோயிலாக

லால் சலாம் படத்தை ஆரம்பித்த நிலையில், திருப்பதி கோயிலுக்கு அப்பா ரஜினிகாந்த் உடன் சென்றிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக ரஜினி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இணைந்து பிரசித்தி பெற்ற அமீன் பீர் தர்காவிற்கும் சென்று வந்தார். தனது தந்தையை போலவே ஆன்மிகத்தில் பற்றுக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் திருவண்ணாமலைக்கும் சென்றுள்ளார்.

அண்ணாமலையார் தரிசனம்

அண்ணாமலையார் தரிசனம்

திருவண்ணாமலைக்கு சமீபத்தில் சாமி தரிசனம் செய்ய சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அண்ணாமலையார் தரிசனம் என போஸ்ட் போட்டு தனது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.

பிரபுதேவாவுடன் வொர்க்கவுட்

பிரபுதேவாவுடன் வொர்க்கவுட்

கணவர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் உடற்பயிற்சி வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் பிரபுதேவாவுடன் வொர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், என் அண்ணன் பிரபுதேவாவுடன் ஸ்ட்ரெச்சிங் செய்தேன் என கேப்ஷன் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பாவுடன் மகன்கள்

அப்பாவுடன் மகன்கள்

சமீபத்தில் நடந்த வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் மகன்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. இந்த மாதம் 17ம் தேதி வாத்தி படம் வெளியாக உள்ள நிலையில், தொடர்ந்து இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா என நடிகர் தனுஷ் படு பிசியாக இருந்து வருகிறார். வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் உடன் அவரது மகன்களை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகினர்.

டபுள் ட்ரீட்

டபுள் ட்ரீட்

ஒரு பக்கம் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே லால் சலாம் படத்தை இயக்க தீவிரம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு திரையரங்குகளில் டபுள் ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X