ரஜினிகாந்த்தின் மகளுக்கு இந்த நிலைமையா?.. அவர் எடுத்திருக்கும் அதிரடி முடிவு என்ன தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு இருவரும் பிரிந்துவிட்டார்கள். கடந்த வருடம் குடும்ப நல நீதிமன்றத்தில் இரண்டு பேருமே தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்கள். சில கவுன்சிலிங்குக்கு பிறகும் அவர்கள் விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்தார்கள். எனவே அவர்களுக்கு நீதிமன்றம் டைவர்ஸ் வழங்கியது. கடைசியாக அவர் லால் சலாம் படத்தை இயக்கினார். அடுத்ததாக அவரது படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை பாராட்டும்போது ஏற்பட்ட பழக்கம் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதலாக மாறியது. பிறகு சில சிக்கல்களை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இருவரின் காதலுக்கு அடையாளமாக யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருமே உச்சக்கட்ட காதலோடு தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருந்தார்கள். முக்கியமாக இரண்டு பேரும் ஒருவரையொருவர் அனுசரித்தும், துணையாகவும் இருந்தனர்.

Aishwarya Rajinikanth Dhanush

இயக்குநர் ஐஸ்வர்யா: ஐஸ்வர்யாவுக்கு இயக்குநராகும் ஆசை இருப்பதை தெரிந்துகொண்ட தனுஷ் 3 படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அடுத்ததாக அவர் இயக்கிய வை ராஜா வை படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது. அப்படத்திலும் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படி இருக்க திடீரென இருவரும் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

கரியரில் கவனம்: தனுஷை பிரிந்த பிறகு சில வருடங்கள் எந்தப் படமும் இயக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் லால் சலாம் படம் தியேட்டரில் வெளியானது. ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதை கூறினார் ஐஸ். அது பெரும் ட்ரோலுக்கு உள்ளானது. மேலும் இன்றுவரை லால் சலாம் ஓடிடியிலும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து: இதற்கிடையே தனுஷும், ஐஸ்வர்யாவும் சில வருடங்களுக்கு முன்பு தங்களது சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் இரண்டு பேரும் பிரிவதாக அறிவித்தார்கள். அதனையடுத்து சில காலம் கழித்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் கடந்த வருடம் விவாகரத்தை கொடுத்துவிட்டது. எனவே தனுஷும், ஐஸ்வர்யாவும் சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டார்கள். இது ரசிகர்களிடையே பெரும் ஷாக்கை ஏற்படுத்தியது.

அடுத்த படம்: இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சித்தார்த்திடம் அவர் சமீபத்தில் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம். ஆனால் அந்தப் படத்தை தயாரிப்பதற்கு யாரும் முன்வரவில்லையாம். இதன் காரணமாக தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அந்தப் படத்தை தயாரிப்பதற்கு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X