ஒரு பக்கம் விவாகரத்து பஞ்சாயத்து.. மறுபக்கம் ஐஸ்வர்யா செஞ்சத பாருங்க.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பிரிவில் இருந்தது. அதனையடுத்து அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இரண்டு குடும்பத்தினரும் முயற்சிகள் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று தனுஷும், ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கின்றனர்.

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களூக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார்.

Aishwarya Rajinikanth Work Out Video Gone Trend on Social Media

இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

லால் சலாம் ஐஸ்வர்யா: சூழல் இப்படி இருக்க அவர் விக்ராந்த், விஷ்ணு விஷால், ரஜினிகாந்த், செந்தில், உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்போடு நேற்று வெளியானது. கிரிக்கெட்டையும், மத பிரச்னையையும் மையமாக வைத்து உருவாகியிருக்கிறது லால் சலாம். இதில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் நேற்று படம் பார்க்க சென்றிருந்தனர்.

கலவையான விமர்சனம்: ஆனால் படமோ ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அவர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. படத்தில் திரைக்கதை சுமார்தான். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று கூறும் ரசிகர்கள்; ரஜினிகாந்த் படத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வந்தாலும் மனதில் நிற்கும்படி ஒரு காட்சிக்கூட இல்லை. அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் மாஸ் சீன்கள்கூட அரைத்த மாவையே அரைத்தது போல்தான் இருந்தது என்று ஓபனாகவே பேசியிருந்தனர்.

விண்ணப்பம்: சூழல் இப்படி இருக்க தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இது சினிமா உலகிலும், தனுஷ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐஸ்வர்யா இன்ஸ்டா: இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறாரே; ஒருபக்கம் டைவர்ஸ் பிரச்னை ஓடினாலும் மறுபக்கம் மனதையும், உடலையும் இப்படி ஃபிட்டாக வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X