ஃபுட்டேஜ் காணோம்.. இடிந்துபோய்விட்டேன்.. லால் சலாம் தோல்விக்கு காரணம் இதுதான் ஐஸ்வர்யா விளக்கம்!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படம் தோல்வி அடைந்த நிலையில், படத்தில் நாங்கள் பல காட்சிகளை தொலைத்துவிட்டோம், எங்களது பொறுப்பின்மைதான் லால் சலாம் படத்தோல்விக்கு காரணம் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் லால் சலாம். ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம், விளையாட்டு மற்றும் மத நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படம், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால், படம் வெளியான முதல் நாளே லால் சலாம் படம் படுதோல்வியை சந்தித்தது.

ஐஸ்வர்யா விளக்கம்: லால் சலாம் பட தோல்வியை ஒப்புக்கொண்ட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், படத்தில் ரஜினிகாந்த் இருந்ததும், நாங்கள் அவர் கதாபாத்திரம் மீது கவனம் செலுத்தியதால், கதை அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இது தான் படத்தின் தோல்விக்கு காரணம். மேலும் படத்தில் இடைவேளைக்கு பிறகுதான ரஜினிகாந்த் வருவதாக இருந்தது. ஆனால் அவரது ரசிகர்கள் ஏமாந்து விட கூடாது என்பதால், அவரின் காட்சிகள் படத்தின் தொடக்கத்திலேயே வருவது போல் செய்தோம் என்று கூறியிருந்தார்.
ஃபுட்டேஜ் காணோம்: ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களை கடுப்பாக்கிய நிலையில், தற்போது லால் சலாம் பட தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் என ஐஸ்வர்யா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், 21 நாள் படப்பிடிப்பு நடத்திய ஃபுட்டேஜ் காணாமப் போயிடுச்சு. ஆயிரக்கணக்கான ஜூனியர் நடிகர்களை வைத்து 10 கேமராக்கள் மூலம் ஒரு கிரிக்கெட் போட்டியை லைவ்வாக ஷூட் பண்ணினோம். அதெல்லாமும் மிஸ்ஸாகிடுச்சு. எங்களது பொறுப்பின்மைதான் காரணமாக அந்த காட்சிகளை தொலைத்துவிட்டோம். அது துரதிர்ஷ்டவசமானது. இதனால், நான் இடிந்து போய்விட்டேன்.
ரீ ஷூட் போக முடியல: அப்பாவும் விஷ்ணு விஷாலும் மீண்டும் படபிடிப்பை நடத்தலாம் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களது கெட்டப் மாறிவிட்டதால், திரும்ப ஷூட் போகவும் முடியல. இதனால கையில் இருந்த ஃபுட்டேஜை வைத்து எடிட் பண்ணி லால் சலாம் படத்தை வெளியிட்டோம். ஹார்ட் டிஸ்க் மட்டும் மிஸ் ஆகலைன்னா நாங்க சொல்ல வந்த விஷயத்தை இன்னும் தெளிவா சொல்லியிருப்போம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் படத்தை ஜெயிலர் படத்தின் வெற்றியால் ஒட்டுமொத்த ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்தோம். அவரை லால் சலாம் படத்தில் நடிக்க வெச்சு காலிபண்ணிட்டு, இப்போ கதை சொல்லுறீங்களா என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











