Lal Salaam release date: வேட்டையனுக்கு முன்னாடி மொய்தீன் பாய் என்ட்ரி.. லால் சலாம் ரிலீஸ் எப்போ?

சென்னை: தனுஷின் 3 மற்றும் கெளதம் கார்த்திக்கின் வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதன் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கி உள்ள படம் தான் லால் சலாம். ரஜினிகாந்த் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில், மொத்த படத்தையும் அவரது படமாகவே தொடர்ந்து லைகா நிறுவனம் புரமோட் செய்து வருகிறது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்கும் ரஜினிகாந்தின் மொய்தீன் பாய் காட்சிகளே வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்ட வசூல் வேட்டையை நடத்திய நிலையில், பல திரையரங்குகளில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து மாஸ் காட்டியது. இநிலையில், இந்த ஆண்டு லால் சலாம், வேட்டையன் மற்றும் தலைவர் 171 என மூன்று படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aishwarya Rajinikanths Lal Salaam release date announced

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 17 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு அவரை பிரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் தனுஷை பிரிந்து விட்டு இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கினார். அதனை தொடர்ந்து அப்பா ரஜினிகாந்த் கேமியோவாக நடிக்கும் லால் சலாம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

அப்பாவுடன் சுற்றும் மகன்கள்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் இடையே பிரிவு ஏற்பட்டாலும் மகன்களை ஒருபோதும் நடிகர் தனுஷ் விட்டு விடவில்லை. தொடர்ந்து தான் செல்லும் அனைத்து இடங்களுக்கும் முன் வரிசையில் தனது அருகிலேயே அமர வைத்து அழகு பார்த்து வருகிறார். கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் இரு மகன்களும் கலந்து கொண்டனர்.

தள்ளிப்போன பொங்கல் ரிலீஸ்: கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதியே லால் சலாம் மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொங்கலுக்கு அந்த போட்டி தள்ளிப் போனது. ஆனால், கடைசி நேரத்தில் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக லால் சலாம் வெளியாகவில்லை என்றும் தற்போது பிப்ரவரி மாதம் தான் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Aishwarya Rajinikanths Lal Salaam release date announced

லால் சலாம் ரிலீஸ் தேதி: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், கபில் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என சற்று முன் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

வேட்டையனுக்கு முன்பாக: இந்த வருஷம் சம்மருக்கு வேட்டையனின் வேட்டையை காண காத்திருக்கும் ரசிகர்கள் அதற்கு முன்பாக லால் சலாம் படத்தின் மூலம் மொய்தீன் பாயின் வெறித்தனமான ஆட்டத்தை காண உள்ளனர். அடுத்தடுத்து இந்த ஆண்டு முழுவதும் சூப்பர் ஸ்டார் பட அப்டேட்கள் வெளியாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X