யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ரொம்ப ஆபத்தானவன்.. லால் சலாம் டிரைலர் எப்படி இருக்கு!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் சில தொழில்நுட்ப கோளாரு காரணமாக டிரைலர் இரவு 9.30 மணிக்கு வெளியானது. அதிரடியாக ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுசை வைத்து த்ரீ படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை இயக்கினார். தற்போது ஐஸ்வர்யாக கிரிக்கெட்டை மையமாக வைத்து லால் சலாம் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில், விக்ராந்த், விஷ்ணுவிஷால் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கேமியோ ரோலில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த வித்தியாசமான கதாபாத்திரத்தை காண ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். மேலும் செந்தில், தம்பி ராமையா, தன்யா பாலகிருஷ்ணன், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
லால் சலாம் டிரைலர் எப்படி: இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது, அந்த டிரைலரின் ஆரம்பத்தில், ஊருக்குள் ஒரு ஆம்பள இல்லடா அத்தனை பேரையும் போலீஸ் அரஸ்ட் பண்ணிடுச்சி, நல்லா இருந்த ஊரை இப்படி சுடுகாடா ஆக்கிட்டாங்க என்ற வசனம் வர, விஷ்ணு விஷால் ஒருவரை சரமாரியாக அடிக்கிறார். இதையடுத்து ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசையில் கோவில் திருவிழா, தேர் ஊர்வலம் என டிரைலர் படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டி உள்ளது.
மாஸ் வசனம்: கூட்டம் சேர்க்கிறவன விட, யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ரொம்ப ஆபத்தானவன் வசனத்துக்குப் பிறகான மொய்தீன் பாயாக ரஜினியின் என்ட்ரி மாஸுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், தான்யா, எந்த ஊர் சாமியா இருந்தாலும் யார் கும்பிடும் சாமியா இருந்தாலும் சாமி சாமிதான் என்று அடுத்தடுத்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் லால் சலாம் டிரைலரில் வசனம் இடம் பெற்று இருப்பது படத்தை திரையில் காணும் ஆவலை தூண்டி உள்ளது.
விஷ்ணு விஷால் பேச்சு: முன்னதாக நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஸ்ணு விஷால், ரஜினி சாருடன், நடிக்க அனைவரும் ஏங்கும் சூழலில் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. படத்தின் ஹீரோ கதை தான். அது தான் ரஜினி சாரையும் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிக நேர்த்தியாக இந்த படத்தை எடுத்தார். ஒரு மகளாகவும் இயக்குனராகவும் ஐஷ்வர்யாக்கு நிறைய நெருக்கடிகள் அவர் சந்தித்தார் என்றார்.


Click it and Unblock the Notifications











