காதலர் தினத்திற்கு தயாராகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… வெளியானது சூப்பர் போட்டோ !

சென்னை : காதலர் தினத்தை முன்னிட்டு மியூசிக் வீடியோ ஒன்றை தயாரிக்கும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார்.

ஐதராபாத் ஓட்டல் ஒன்றில், மியூசிக் வீடியோ பற்றிய விவாதத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் குழுவினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

காதலர் தினத்தையொட்டி வெளியாகவுள்ள இப்பாடல் காதலர்களை கவரும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரிந்தனர்

பிரிந்தனர்

நட்சத்திர தம்பதிகளான ஐஸ்வர்யா, தனுஷ் பிரிவதாக கடந்த வாரம் அறிவித்து இருந்தனர். 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிவுக்கு என்ன காரணம் என்பது தெரியாததால், இணையத்தில் பலவிதமான வதந்திகள் பரவி வருகின்றன. எந்த வதந்திக்கும் பதில் அளிக்காமல் இருவரும் அமைதியாகவே உள்ளனர்.

ஆல்பம்

ஆல்பம்

ஐஸ்வர்யா இயக்குனர் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி உள்ளார். டிப்ஸ் தயாரிக்கும் மியூஸிக் வீடியோ ஆல்பம் ஒன்றை இயக்குகிறார். இதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணியை ஹைதராபாத்தில் அவர் தொடங்கியுள்ளார். தனது குழுவினருடன் அவர் ஆலோசனை செய்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காதலர் தினத்தில்

காதலர் தினத்தில்

மியூசிக் வீடியோ படப்பிடிப்புகள் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நாளை துவங்க உள்ளது. மியூசிக் வீடியோவில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் பணியாற்றும் குழுவினரை இறுதிசெய்யும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். பே பிலிம்ஸ் சார்பில் வெளியிடப்படவுள்ள மியூசிக் வீடியோ காதலர் தினத்தில் வெளியாக உ ள்ளது.

ஒரே ஓட்டலில்

ஒரே ஓட்டலில்

நடிகர் தனுஷ், வாத்தி படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் இருக்கிறார். ஐஸ்வர்யாவும் தனது பட வேலைகளுக்காக அங்கு தான் இருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார்களாம். தாங்கள் இப்படி ஒரே இடத்தில் இருப்பது அவர்களுக்கும் தெரியுமாம். இதனால் அவர்கள் சந்தித்து பேசினார்களா? தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார்களா என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X