»   »  ரஜினி விஷயம் மாதிரி இல்லாமல் சிரஞ்சீவிக்கு ஓகே சொல்வாரா ஐஸ்வர்யா ராய்?

ரஜினி விஷயம் மாதிரி இல்லாமல் சிரஞ்சீவிக்கு ஓகே சொல்வாரா ஐஸ்வர்யா ராய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சிரஞ்சீவி நடிக்கும் சரித்தப் படமான உய்யலவாடாவில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய சரித்திரப் படங்களான பாகுபலி மற்றும் பாகுபலி 2 சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் பாகுபலி 2 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் மேலும் ஒரு சரித்திரப் படம் தயாராகிறது.

உய்யலவாடா

உய்யலவாடா

சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. இதில் நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்களாம். அவர் நடிக்க சம்மதித்தால் இது தான் அவர் நடிக்கும் முழு நீள தெலுங்கு படம்.

நாகர்ஜுனா

நாகர்ஜுனா

நாகர்ஜுனாவின் ராயோவி சந்தமாமா படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் ஐஸ்வர்யா. கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா நடித்த ஏ தில் ஹை முஷ்கில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

ரஜினி

ஐஸ்வர்யா சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க சம்மதிப்பார் என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அவர் மறுக்க இறுதியில் அவர் மாமனார் அபிதாப் பச்சனின் உதவியை நாடப்பட்டது. அமிதாப் கூறிய பிறகே ஐஸ் ரஜினியுடன் நடிக்க சம்மதித்தார்.

English summary
According to reports, Aishwarya Rai is set to act with Chiranjeevi in his upcoming movie Uyyalavada.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil