தனுஷின் பிரிவுக்குப்பின் மகள் ஐஸ்வர்யாவை முதன் முதலில் பாராட்டிய ரஜினி… ஓ இதற்காகத்தானா?

சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பயணி ஆல்பம் பாடலை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

ஐஸ்வர்யா மியூசிக் வீடியோ இயக்குவதில் தனது கவனத்தை செலுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது.

3, வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கி ஐஸ்வர்யா கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆல்பம் பாடலை இயக்கி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பயணி

பயணி

தமிழில் இந்த ஆல்பத்திற்கு பயணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோவை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் என் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் பயணி இசையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. நீ எப்போதும் சிறப்பாக இருக்க விரும்புகிறேன். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். லவ் யூ என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

அனிருத்தின் குரலில்

அனிருத்தின் குரலில்

அன்கித் திவாரி இசையமைத்துள்ள தமிழ்பாடலை அனிருத் பாடியுள்ளார். காத்துக்கு மேல காகிதம் போல எனத் தொடங்கும் இந்த பாடல் வரி மெய்மறக்கவைத்து, காதுக்குள் தேன் போல பாய்கிறது. மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.

யாத்ரக்காரன்

யாத்ரக்காரன்

மலையாளத்தில் இந்த ஆல்பத்திற்கு'யாத்ரக்காரன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை ரஞ்சித் பாடியிருக்கிறார். இந்த பாடலின் வீடியோவை மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துக்களை கூறினார்,

சஞ்சாரி

சஞ்சாரி

தெலுங்கில் இப்பாடலுக்கு சஞ்சாரி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த பாடலை சாகர் பாடி உள்ளார். இந்த பாடலை நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ளார். இந்தியில் அன்கித் திவாரி பாடியுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த பாடலுக்கு பல திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நெகிழ்ந்த ஐஸ்வர்யா

நெகிழ்ந்த ஐஸ்வர்யா

தனுஷை விட்டு ஐஸ்வர்யா பிரிந்து வந்த, அவர்களின் பிரிவு குறித்து வாய் திறக்காமல் இருந்த ரஜினிகாந்த், தந்போது தனது மகளை பாராட்டி லவ் யூ என்று கூறியுள்ளதால் ஐஸ்வர்யா மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார். இத்தனை நாள் பட்டகஷ்டம் கூட தந்தைபாராட்டில் நிச்சயம் கரைந்து இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X