Don't Miss!
- News
அவசரப்படாதீங்க அண்ணே.. எடப்பாடிக்கு போன "அட்வைஸ்".. புதிய கூட்டணியை கைவிட்டது ஏன்? என்ன நடந்தது?
- Sports
ஓ இதுதான் ட்ரிப்பிளா திருப்பி குடுக்குறதா? சோதித்து பார்த்த நியூசி,.. சூர்யகுமார் தரமான பதிலடி!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Technology
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தனுஷுடன் சேர்கிறாரா ஐஸ்வர்யா?..ரஜினியின் போட்டோவுடன் போட்ட ட்வீட்… பரபரக்கும் கோலிவுட்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனுஷை பிரிந்து தனது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.
சினிமா இயக்குநர், பாடகி என பன்முகத் திறமையாளரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சோஷியல் மீடியாக்கள் ஆக்டிவாக இருப்பவர்.
ஐஸ்வர்யா தற்போது தனது தந்தை ரஜினியின் போட்டோவுடன் க்யூட்டாக விஜயதசமி வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்துள்ளார்.
அந்த
அரியணையை
ஐஸ்வர்யா
ராய்
பார்க்கும்
காட்சி..
பொன்னியின்
செல்வனை
சிலாகித்த
சிவகார்த்திகேயன்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ட்விட்
தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல்டைம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, சோஷீயல் மீடியாக்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். தனுஷுடன் காதல் திருமணம் என சென்றுகொண்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், '3' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இயக்குநராக மட்டுமில்லாமல் பாடகியாகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார் ஐஸ்வர்யா. இந்நிலையில், தனது தந்தை ரஜினியின் போட்டோவுடன் விஜயதசமி வாழ்த்து சொல்லி ட்வீட் செய்துள்ளார் ஐஸ்வர்யா.

விலைமதிப்பற்ற புகைப்படம்
ஐஸ்வர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், ரஜினியின் செம்ம ரியலஷ்டிக்கான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில், டீ-ஷர்ட்டுடன் ஸ்டைலிஷாக ஷோபாவில் உக்கார்ந்திருக்கும் ரஜினி, கையில் செல்போன் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இதனை ஷேர் செய்துள்ள ஐஸ்வர்யா, "பொய் எதுவும் தேவையில்லை, இது ஒருபோதும் தவறாகாது, இந்த முகம் எப்போதும் தவறான கோணத்தில் தோற்றமளிக்காது, இது விலைமதிப்பற்ற பாசிட்டிவான போட்டோ, இது எப்போதும் உங்கள் வாழ்வில் நிலைத்திருக்கட்டும்" என்ற கேப்ஷனோடு விஜயதசமி வாழ்த்துக் கூறியுள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த ட்வீட் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து?
இன்னொருபக்கம் தனுஷின் கேரியரில் பக்கபலமாக இருந்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஐஸ்வர்யாவின் வருகைக்குப் பின்னர், தனுஷின் கேரியரில் மிகப் பெரிய சக்ஸஸ் கிடைத்தது. ஆனாலும், திடீரென அவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து ரசிகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இதனால், இப்போது தனது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் தனித்தனி பாதைகளில் பயணிக்கப் போவதாகவும் அறிவித்த்திருந்தனர். மேலும், விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியிருந்தார்.

இருவரது முடிவிலும் மாற்றம்
இதனிடையே, சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாக சென்றிருந்தனர். பிரிவை அறிவித்த பின்னர் இருவரும் ஒன்றாக இருந்த இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்கள் விவாகரத்தை முடிவை ரத்து செய்து மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.