மகத்தை விரட்டிவிட்டுட்டு பெருசா திட்டம் போடும் யாஷிகா, ஐஸ்வர்யா
சென்னை: ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் மகத்தை வெளியே அனுப்பி வைத்துவிட்டு பெரிய திட்டம் போடுகிறார்கள்.
மகத்தை ஏத்திவிட்டு வேடிக்கை பார்த்த ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் தற்போது அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிட்டனர். மகத் கிளம்பியபோது யாஷிகா குமுறிக் குமுறி அழுதார்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோக்களை பார்த்தால் அடேங்கப்பா என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
அம்மா
அம்மாவை நினைத்து பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கதறி அழும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் அம்மாவை நினைத்து ரொம்பவே அழுகிறார்கள்.
விஜயலட்சுமி
விஜயலட்சுமி ரொம்ப தெளிவாக இருக்கிறார். அவர் பேசுவதை பார்த்தால் அடுத்த பிரச்சனை அவரால் தான் ஏற்படும் போன்று. சும்மாவா நாயகி சீரியலில் இருந்து விலக வைத்து பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் மகத்தை லூசாக்கி விரட்டிவிட்டுட்டு பெரிதாக திட்டம் போடுகிறார்கள்.
மகிழ்ச்சி
ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா அழுதால் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் கடுப்பேற்றுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











