twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவுக்கு வந்த காங்கிரஸ் தகராறு சென்னை:சூர்யா, த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ஆறு படத்தில் அரசியல்வாதிகளை கிண்டல் செய்து வசனம் பேசியது தொடர்பாகநடிகை ஐஸ்வர்யா (நடிகை லட்சுமியின் மகள்), இயக்குனர் ஹரி, தயாரிப்பாளரான இயக்குனர் சரண் ஆகியோர் மீது வழக்குதொடரப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ராஜரத்தினம் என்பவர் சென்னை எழும்பூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருவழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஆறு படத்தில் சவுண்டு சரோஜா என்ற பாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்துள்ளார்.ஒரு பொதுக் கூட்டத்தில் ஐஸ்வர்யா பேசுவது போல காட்சி வருகிறது. அந்தக் காட்சியில், டேய் ராஜரத்தினம், நீ மாவட்டத்தலைவராடா? இல்லை, நீ மாவட்டுற தலைவர் என்று கோபத்துடன் பேசுகிறார்.இந்த வசனம் என்னைக் கிண்டல் செய்வது போல உள்ளது. காரணம், இந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவர்,சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர்.அவர் காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவராகவும் அவர் உள்ளார். உட் கட்சிப் பிரச்சினை காரணமாக எனது பெயரை படத்தில்வசனமாக சேர்த்து பழி தீர்த்துக் கொள்ளும் விதத்தில் இந்தக் காட்சியை வைக்க இயக்குனரை அவர் நிர்பந்தம் செய்துள்ளார்.அவரது தூண்டுதலின் பேரில்தான் இந்தக் காட்சி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட நான் முடிவு செய்திருந்தேன். ஆனால் ஆறு பட வசனத்தால், எனது புகழ் கெட்டுப்போயுள்ளது. மன உளைச்சல் அடைந்துள்ளேன். எனவே இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் சரண், நடிகை ஐஸ்வர்யா ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜரத்தினம்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகரன், இதுகுறித்து வருகிற மார்ச் மாதம் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்அளிக்கமாறு கூறி ஹரி, சரண், ஐஸ்வர்யா ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.இதேபோல, சென்சார் போர்டுக்கும் ராஜரத்தினம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், படத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல்இந்தக் காட்சி வருகிறது. இதைக் கவனிக்காமல் தணிக்கை சான்றிதழ் அளித்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே மீண்டும்ஆறு படத்தை தணிக்கை செய்து மறு சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜரத்தினம்.தங்கள் பிரச்சனையில் சினிமாவை இழுத்து விட்டுள்ளனர் இரு காங்கிரஸ் நிர்வாகிகள். செவ்வாய் கிரகத்துக்குப் போனாலும்காங்கிரஸ் கோஷ்டி சண்டை ஓயாது போல.

    By Staff
    |

    சென்னை:


    சூர்யா, த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ஆறு படத்தில் அரசியல்வாதிகளை கிண்டல் செய்து வசனம் பேசியது தொடர்பாகநடிகை ஐஸ்வர்யா (நடிகை லட்சுமியின் மகள்), இயக்குனர் ஹரி, தயாரிப்பாளரான இயக்குனர் சரண் ஆகியோர் மீது வழக்குதொடரப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ராஜரத்தினம் என்பவர் சென்னை எழும்பூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருவழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஆறு படத்தில் சவுண்டு சரோஜா என்ற பாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்துள்ளார்.

    ஒரு பொதுக் கூட்டத்தில் ஐஸ்வர்யா பேசுவது போல காட்சி வருகிறது. அந்தக் காட்சியில், டேய் ராஜரத்தினம், நீ மாவட்டத்தலைவராடா? இல்லை, நீ மாவட்டுற தலைவர் என்று கோபத்துடன் பேசுகிறார்.

    இந்த வசனம் என்னைக் கிண்டல் செய்வது போல உள்ளது. காரணம், இந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவர்,சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர்.

    அவர் காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவராகவும் அவர் உள்ளார். உட் கட்சிப் பிரச்சினை காரணமாக எனது பெயரை படத்தில்வசனமாக சேர்த்து பழி தீர்த்துக் கொள்ளும் விதத்தில் இந்தக் காட்சியை வைக்க இயக்குனரை அவர் நிர்பந்தம் செய்துள்ளார்.அவரது தூண்டுதலின் பேரில்தான் இந்தக் காட்சி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.


    வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட நான் முடிவு செய்திருந்தேன். ஆனால் ஆறு பட வசனத்தால், எனது புகழ் கெட்டுப்போயுள்ளது. மன உளைச்சல் அடைந்துள்ளேன். எனவே இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் சரண், நடிகை ஐஸ்வர்யா ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜரத்தினம்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகரன், இதுகுறித்து வருகிற மார்ச் மாதம் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்அளிக்கமாறு கூறி ஹரி, சரண், ஐஸ்வர்யா ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

    இதேபோல, சென்சார் போர்டுக்கும் ராஜரத்தினம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், படத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல்இந்தக் காட்சி வருகிறது. இதைக் கவனிக்காமல் தணிக்கை சான்றிதழ் அளித்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே மீண்டும்ஆறு படத்தை தணிக்கை செய்து மறு சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜரத்தினம்.

    தங்கள் பிரச்சனையில் சினிமாவை இழுத்து விட்டுள்ளனர் இரு காங்கிரஸ் நிர்வாகிகள். செவ்வாய் கிரகத்துக்குப் போனாலும்காங்கிரஸ் கோஷ்டி சண்டை ஓயாது போல.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X