Lal salaam first day collection: லால் சலாம் முதல் நாள் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் நேற்று வெளியானது. உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து நல்ல விமர்சனங்களை கூறி வருகின்றனர். குறிப்பாக மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி மிரட்டிவிட்டார் என்று ரசிகர்கள் ரஜினியை கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுசை வைத்து த்ரீ என்ற படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்களை இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா, தனுஷை பிரிந்த பிறகு மீண்டும் இயக்கத்தில் கவனத்தை செலுத்தி, 9 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி உள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த படத்தில், விஷ்ணு விஷால், நிரோஷா, விக்ராந்த், ஜீவிதா, செந்தில், தங்கதுரை என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். லைகா நிறுவனம் சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியீட்டு உரிமையை பெற்றது.
ரசிகர்கள் ஆர்வம்: லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போகிறார் என்றதும் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இதையடுத்து ரஜினிகாந்தின் மொய்தீன் பாய் போஸ்டர் வெளியானதும், லால் சலாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரண்டு மடங்காக மாறியது. லால் சலாம் முழுக்க முழுக்க ரஜினி காந்த் படம் இல்லை என்றாலும், இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில், இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தால், நானே நடிக்க முன்வந்தேன் என்று கூறியிருந்தால், ரஜினியை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
லால் சலாம் படத்தின் கதை: முரார்பாத் கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக ஆனவர் தான் மொய்தீன் பாய் ரஜினிகாந்த். இந்த கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியின் போது, சிறு மோதல், பெரிய கலவரமாக வெடித்து அது இந்து - முஸ்லிம் கலவரமாக மாறி இருவருக்கும் பிளவை ஏற்டுத்தி விடுகிறது. இதனைத் தொடர்ந்து கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா தடுக்கப்படுகிறது. இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவியதா, தேர்த் திருவிழா நடந்ததா என்பது தான் லால் சலாம் படத்தின் கதை.
புது கொடி: லால் சலாம் படம் நேற்று வெளியான நிலையில், வேலூரில் ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் மேளதாளத்துடன் ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்தனர். மேலும், லால் சலாம் படம் வெற்றி பெற வேலூரில் சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது. அதே போல திருச்சி ரஜினி ரசிகர் மன்றத்தினர் படத்தின் மூலம் மதநல்லிணக்கத்தை வலியுறுத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தினர்.
முதல் நாள் வசூல்: லால் சலாம் பல தியேட்டர்களில் நேற்று வெளியான நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், லால் சலாம் படம் ரூ.4.30 கோடியை வசூலித்துள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதாலும், இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதாலும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











