'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர்.. அராஜக மாரியம்மாவாக மாறிய ஐஸ்வர்யா!

சென்னை: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் 'கண்ணப்பா'. இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கும் நிலையில் இப்படத்தில் சூனியக்காரியாக நடிக்கும் ஐஸ்வர்யாவின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவன்தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் இந்த கண்ணப்பநாயனார். சிவபெருமானின் மீது அசைக்க முடியாத பக்தி கொண்ட கண்ணப்பாவின் கதை சொல்லும் படம் தான் இப்படம். முற்பிறவியில் கண்ணப்பநாயனார் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார். அவர் மகாபாரதபோரில் தன்னுடைய மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்ல, உணவும் உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக கைலாசம் சென்றார்.

kannappa aishwarya new poster

கண்ணப்பா திரைப்படம்: அங்கு சிவனைப் பார்த்து மெய்மறந்த அர்ஜூனன்,மகனை கொன்றவர்களை கொன்றவர்களை கொல்லவேண்டும் என்ற வரத்தை மறந்து, அய்யனே உன்னை என்றுமே மறவாத வரத்தை தரவேண்டும் என்று கேட்டார். அர்ஜூனன் கேட்ட வரத்தை அடுத்த பிறவில் உனக்கு கிடைக்கும் என்று சிவபெருமான் வரம் கொடுத்தார். அந்த வரத்தின் பலனாக, கண்ணபிரான் தீவிர சிவ பக்தராக இருந்தார். இப்படி வரலாற்று சிறப்பு மிக்க இத்திரைப்படம் தான் கண்ணப்பா.

kannappa aishwarya new poster

சூனியக்காரி: இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில், விஷ்ணு மஞ்சு, அக்‌ஷய் குமார், மோகன் பாபு, மோகன்லால், பிரம்மானந்தம், பிரபாஸ், ஐஸ்வர்யா என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், 'கண்ணப்பா' திரைப்படத்தின்புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகை ஐஸ்வர்யா சூனியக்காரியாக நடித்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள இந்த போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா: 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா, ராசுகுட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ரஜினிகாந்த், பாக்யராஜ், பார்த்திபன், விக்ரம் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்திருந்த ஐஸ்வர்யா, தற்போது, வில்லி, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார், கடந்த ஆண்டு வெளியான தாதா படத்தில் மணிகண்டனின் அம்மாவாக நடித்திருந்தார். சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். இவர், பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஆகார்.

kannappa aishwarya new poster

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X