பிக் பாஸ் 3: ‘செல்லக்குட்டி’யின் ஆசையை தீர்த்து வைப்பாரா பிக் பாஸ்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

சென்னை: பிக் பாஸ் சீசன் 3யில் மீண்டும் கலந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பிக் பாஸ் சீசன் 3 அடுத்த மாதம் ஆரம்பமாக இருக்கிறது. இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் அதன் புரொமோ வெளியானது.

சீசன் 3 போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது. இதனால் பலரது பெயர் இந்தப் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

ஐஸ்வர்யா தத்தா:

ஐஸ்வர்யா தத்தா:

இந்நிலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வசிக்க விரும்புவதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. முதல் சீசனில் ஜூலியைப் போலவே, இரண்டாம் சீசனில் மக்களிடம் அதிக வெறுப்பைச் சம்பாதித்தவர் ஐஸ்வர்யா தான்.

செல்லக்குட்டி:

செல்லக்குட்டி:

ஒவ்வொரு வாரமும் ஐஸ்வர்யா வெளியேறி விடுவார் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவரை பிக் பாஸ் காப்பாற்றி விடுவார். இதனால் பிக் பாஸின் செல்லக்குட்டி ஐஸ் தான் என மக்கள் கிண்டல் செய்து வந்தனர்.

2ம் இடம்:

2ம் இடம்:

கடைசியில் அவருக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டாம் சீசனின் டைட்டில் வின்னரானார் ரித்விகா. ஐஸ்வர்யாவுக்கு ரன்னர் அப் தான் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார் அவர்.

விருந்தினர்:

விருந்தினர்:

ஆனால் போட்டியாளராக அல்லாமல் விருந்தாளியாக பிக் பாஸ் வீட்டில் சில நாட்கள் மீண்டும் வசிக்க வேண்டும் என்பது தான் அவரது ஆசையாம். இரண்டாம் சீசனின் தொடக்கத்தில் முதல் சீசன் போட்டியாளரான ஓவியா, ஆரவ், ஆர்த்தி போன்றோர் இதே போன்று பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தது நினைவு கூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X