குதிரையுடன் ஜோடியாக வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா!
சென்னை : பிக்பாஸ் ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்திருக்கும் அலேகா திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி சக்கைபோடு போட்டது.
இந்தி மற்றும் தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் லஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக் செய்யப்பட அதில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்.
கவர்ச்சியால் அனைவரையும் அசர வைத்து வந்த ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது குதிரையுடன் ஜோடியாக வெட்டிங் போட்டோ ஷூட் நடத்தியுள்ள புகைப்படங்கள் இணையதளத்தை மிரள வைத்துள்ளது.

நகுல் ஜோடியாக
குடும்பப்பாங்கான கதாநாயகிதான் ஆனால் கவர்ச்சியும் காட்டுவேன் என தமிழ் சினிமாவில் கெத்து காட்டி கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுதவும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இதில் இவருக்கு ஜோடியாக நகுல் நடித்திருப்பார்.

லீட் ரோலில்
இதுவரை பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இவருக்கு மிகப்பெரிய வெற்றி என்று ஒன்றும் அமையவில்லை அதனாலேயே எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது மிளிர் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

விரைவிலேயே வெளியாக உள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை பெற்ற ஆரி உடன் இணைந்து நடித்திருக்கும் அலேகா விரைவிலேயே வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இதன் டீசர் மற்றும் டிரைலர் அனைவரையும் கவர்ந்திருந்தது.
Recommended Video

குதிரையை விடாப்படியாக சுற்றி
இவ்வாறு படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் அதே சமயம் சமூக வலை தளங்களிலும் சுறுப்பாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது முரட்டு குதிரையுடன் ஜோடியாக வெட்டிங் போட்டோ ஷூட் செய்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தை மிரட்டியுள்ளது. அதில் குதிரை மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் மேட்சிங் மேட்சிங்காக வெள்ளை நிறத்தில் இருக்க ஐஸ்வர்யாவோ தலையில் தேவதை போல மலர்களாலான கிளிப் ஒன்றையும் போட்டுக்கொண்டு குதிரையை விடாப்படியாக சுற்றி சுற்றி எடுத்த புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை கலக்கிக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











