பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது நான் செய்த அதிர்ஷ்டம்... முன்னாள் உலக அழகி ஹேப்பி!

மும்பை : முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்திய அளவில் சிறப்பான நடிகையாகவும் உள்ளார்.

பாலிவுட், கோலிவுட் என பல படங்களில் இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இவரது அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய்

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய அழகால் தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டவர். இவரது நடிப்பும் சிறப்பாக காணப்பட்ட நிலையில், ரசிகர்கள் இவரை கொண்டாடினர். தொடர்ந்து பாலிவுட்டிற்கு போன இவர், அங்கேயே செட்டில் ஆனார்.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

அமிதாப் பச்சன் வீட்டின் மருமகளானார். சில காலங்கள் நடிக்காமல் இருந்த இவர் தற்போது தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து எந்திரன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

முக்கியமான கேரக்டரில் ஐஸ்வர்யா

முக்கியமான கேரக்டரில் ஐஸ்வர்யா

இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் நடிகர்களின் போஸ்டர்கள் வெளியான நிலையில், இவரது போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்கள்

படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை பிரபல எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் படிக்கும்போதே அந்த பிரம்மாண்டத்தை நம் கண்முன்னே எடுத்து சொல்லும். இந்நிலையில் படம் ரசிகர்களிடையே எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது படத்தின் ரிலீசுக்கு பிறகே தெரியவரும்.

அதிர்ஷ்டம் என ஐஸ்வர்யா மகிழ்ச்சி

அதிர்ஷ்டம் என ஐஸ்வர்யா மகிழ்ச்சி

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் அளித்துள்ள பேட்டியில், பொன்னியின் செல்வன் படம் ஒரு கனவு படம் என்றும் அதில் நடித்துள்ளது பெருமையை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும் கூறியுள்ளார்.

மிகச்சிறந்த அனுபவம்

மிகச்சிறந்த அனுபவம்

இந்தப் படம் தனக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்ததாகவும் மணிரத்னம் போன்ற இயக்குநருடன் பணியாற்றும்போது அது தானாகவே அமையும் என்றும் அவர் பாராட்டியுள்ளார். மேலும் இந்தப் படம் தனக்கு மிகச்சிறந்த கற்றல் அனுபவத்தை கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேன்சில் ஐஸ்வர்யா ராய்

கேன்சில் ஐஸ்வர்யா ராய்

தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் தன்னுடைய குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராய். அடுத்தடுத்த நாட்களில் சிறப்பான பல உடைகளுடன் இவர் இந்த விழாவில் அனைவரையும் கவர்ந்து சிறப்பித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்த விழாவில் இவர் தொடர்ந்து கலந்துக் கொண்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X