தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்கள்... வெரைட்டி காண்பிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை : தொடர்ந்து தான் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சிறப்பான இடத்தை தக்க வைத்துள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

Recommended Video

Aishwarya Rajesh மக்களிடம் வேண்டுகோள் | நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்

பூமிகா படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.

சிறப்பான இடம்

சிறப்பான இடம்

தான் தேர்ந்தெடுத்து நடித்துவரும் கதாபாத்திரங்கள் மூலம் கோலிவுட்டில் தனக்கென சிறப்பான இடத்தை பிடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டக்கத்தி, காக்கா முட்டை, பண்ணையாரும் பத்மினியும், மனிதன் உள்ளிட்ட படங்களில் இவரது வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்தது.

10க்கும் மேற்பட்ட படங்கள்

10க்கும் மேற்பட்ட படங்கள்

தற்போது கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. 10க்கும் மேற்பட்ட படங்கள் இவரது கிட்டியில் உள்ளது. இவரது நடிப்பில் தற்போது பூமிகா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ரதீந்திரன் பிரசாத் என்பவர் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

வித்தியாசமான கேரக்டர்

வித்தியாசமான கேரக்டர்

நெட்பிளிக்ஸ் ஓடிடி பிளாட்பார்மிற்காக இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. இவர்தான் இந்த படத்தின் லீட் ரோலில் நடித்து வருகிறார். இயற்கைக்கு எதிராக மனித குலம் நாச வேலைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் இயற்கை மனிதகுலத்திற்கு எதிராக வெகுண்டால் என்ன ஆகும் என்பதை கதைக்களமாக இந்த படம் கொண்டுள்ளது.

சிறப்பான படம்

சிறப்பான படம்

பேஷன் ஸ்டூடியோ மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. பிரித்வி சந்திரசேகர் இசையில் ஆனந்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இந்த படமும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X