twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம்மையும் காப்போம்... நாட்டையும் காப்போம்... விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

    |

    சென்னை : கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    Recommended Video

    Aishwarya Rajesh மக்களிடம் வேண்டுகோள் | நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்

    இதையொட்டி தமிழ் திரையுலகினர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டனர்.

    மூக்கை புத்தகத்தினுள் புதையுங்கள்… உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும்… ஆண்ட்ரியா அட்வைஸ் !மூக்கை புத்தகத்தினுள் புதையுங்கள்… உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும்… ஆண்ட்ரியா அட்வைஸ் !

    இதைதொடர்ந்து தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    தமிழக அரசு நடவடிக்கை

    தமிழக அரசு நடவடிக்கை

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காக்கும்வகையில் தொடர்ந்து முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

    நடிகர்கள் விழிப்புணர்வு

    நடிகர்கள் விழிப்புணர்வு

    இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக திரைத்துறையினரை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதையொட்டி நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டனர்.

    விழிப்புணர்வு வீடியோ

    விழிப்புணர்வு வீடியோ

    இதேபோல தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவது அலை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    கைகளை சுத்தமாக வையுங்கள்

    வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ள அவர், தவிர்க்க முடியாமல் வெளியில் வரும்பட்சத்தில் இரண்டு மாஸ்க்குகளை அணியும்படியும் வலியுறுத்தியுள்ளார். மேலும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கியுள்ளார். குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    கொரோனாவை வெல்வோம்

    கொரோனாவை வெல்வோம்

    மேலும் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவை வெல்வோம் மக்களை காப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு திரைத்துறையினரை வைத்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Government has now released a new video featuring Aishwarya Rajesh
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X