பிறந்த நாளும் அதுவுமா.. கால் டாக்ஸி டிரைவராகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. 3 மொழிகளில் பிரம்மாண்டம்!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் நடித்து சில மாதங்களுக்கு ஓடிடியில் வெளியான க/பெ ரணசிங்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திட்டம் இரண்டு
ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கு ஏராளமான பாராட்டுக்கள் கிடைத்தன. இதையடுத்து அவர் நடித்துள்ள பூமிகா என்ற படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், திட்டம் இரண்டு என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

பொலிட்டிகல் த்ரில்லர்
தெலுங்கில் இப்போது நானி ஜோடியாக டக் ஜகதீஷ் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து, சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தை தேவா கட்டா இயக்குகிறார். பொலிட்டிகல் த்ரில்லர் படமான இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

டிரைவர் ஜமுனா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று பிறந்த நாள். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்துக்கு டிரைவர் ஜமுனா என்று டைட்டில் வைத்துள்ளனர்.

கால்டாக்ஸி டிரைவர்
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. படத்தில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். 'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி தயாரிக்கிறார்.

கலைஞர்கள் தேர்வு
நடுத்தர குடும்பத்து பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாகக் கொண்ட கிரைம் திரில்லர் கதையை கொண்ட இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











