ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிட்சன் படம்... முக்கிய அப்டேட் இதோ!

சென்னை : மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் தி கிரேட் இந்தியன் கிட்சன். இந்தப் படம் சர்வதேச அளவில் பல விருதுகளையும் அள்ளியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் கண்ணன். ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தின் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை வத்திக்குச்சி என்ற படத்தை இயக்கிய கின்ஸ்லின் இயக்கியுள்ளார். படத்தில் கேப் ஓட்டுநராக நடித்துள்ளார் ஐஸ்வர்யா.

4 மொழிகளில் ரிலீஸ்

4 மொழிகளில் ரிலீஸ்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து மலையாள நடிகை பார்வதியுடன் இணைந்து Her என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இதையடுத்து சூழல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்த தொடர் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. விக்ரமுடன் துருவ நட்சத்திரம், அர்ஜூனுடன் தீயவர் குலைகள் நடுங்க மற்றும் விஷ்ணு விஷாலுடன் மோகன்தாஸ் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

தி கிரேட் இந்தியன் கிட்சன்

தி கிரேட் இந்தியன் கிட்சன்

இதனிடையே மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிட்சன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கண்ணன் டைரக்ட் செய்துள்ளார். மலையாளத்தில் இந்தப் படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றது. சர்வதேச அளவில் பல விருதுகளையும் கைப்பற்றியது.

வரவேற்பை பெற்ற போஸ்டர்கள்

வரவேற்பை பெற்ற போஸ்டர்கள்

தமிழில் தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தை ஆர்டிசி மீடியா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன. படத்தில் ராகுல் ரவீந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஜெர்ரி சில்வஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார்.

யூ/ஏ சான்றிதழ்

யூ/ஏ சான்றிதழ்

இதனிடையே இந்தப் படத்தின் சென்சார் தற்போது முடிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மிகவும் எளிமையான காட்சிகளுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும்.

பெண்கள் குறித்த சமூக பார்வை

பெண்கள் குறித்த சமூக பார்வை

ஆனாலும் படத்தின் பெண்ணிய கருத்துக்கள் ஒவ்வொருவருக்கும் சாட்டையடி கொடுத்தது போல அமைந்திருக்கும். பெண் என்பவள் சமையலறைக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற சமூகத்தின் பார்வை தற்போது நன்றாகவே மாறியுள்ளது. ஆனாலும் பழமைவாதிகளின் இந்த பார்வை மேலும் மாற வேண்டும் என்பதையே இந்தப் படம் கதைக்களமாக கொண்டு ரிலீசானது. தமிழில் அந்த பாதிப்பை இந்தப் படம் கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X