மனமாற்றத்திற்கு தயாராகிவிட்டாரா ஐஸ்வர்யா? ...தெம்பான முயற்சிதான்

சென்னை : நடிகர் தனுஷுடனான பிரிவுக்கு பிறகு தன்னை அடுத்தடுத்த ப்ராஜக்ட்களில் பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா. சமீபத்தில் இவரது இயக்கத்தில் முசாபிர் என்ற இசை ஆல்பம் 4 மொழிகளில் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்ததாக பாலிவுட்டிலும் படமியக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

 இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷுடனான தனது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முடிவை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார். இந்த முடிவு தனுஷ் ரசிகர்களை மட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கேரியரை நோக்கிய பயணம்

கேரியரை நோக்கிய பயணம்

இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. ஆனால் தங்களது முடிவில் இருவருமே மிகவும் உறுதியாக உள்ளனர். குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் திரையுலகில் தன்னுடைய கேரியரை நோக்கிய பயணத்தை துவங்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் முசாபில் என்ற இசை ஆல்பம் வெளியானது.

இசை ஆல்பம் வெளியீடு

இசை ஆல்பம் வெளியீடு

தமிழில் பயணி என்ற பெயரில் வெளியான இந்த ஆல்பத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் இந்த ஆல்பத்தை பிரபலங்கள் வெளியிட்டனர். இந்த ஆல்பம் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக பாலிவுட்டில் தான் இயக்கவுள்ள ஓ சாதி செல் என்ற புதிய படம் குறித்த அறிவிப்பையும் ஐஸ்வர்யா மேற்கொண்டுள்ளார்.

வொர்க் அவுட் புகைப்படம் வெளியீடு

வொர்க் அவுட் புகைப்படம் வெளியீடு

தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது தான் வொர்க் அவுட் செய்யும் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நம்முடைய உண்மையான சக்தியை யாரும் அறிய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மனமாற்றத்தை காட்டும் ஐஸ்வர்யா

மனமாற்றத்தை காட்டும் ஐஸ்வர்யா

ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் வொர்க் அவுட் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். உடல் வலியால் கதறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வொர்க் அவுட்டை முடித்துவிட்டு தான் சுவற்றில் சாய்ந்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். படங்களை இயக்குவது, மீண்டும் தனது வொர்க் அவுட்டை துவக்குவது என்று அவர் அடுத்தடுத்து செய்வது அவருடைய மனமாற்றத்தை காட்டுகிறது.

தனுஷின் பெயர் நீக்கம்

தனுஷின் பெயர் நீக்கம்

தனுஷுடனான தன்னுடைய பிரிவிற்கு பிறகும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமிலிருந்து தனுஷுன் பெயரை நீக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா. இதனால் அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு தனுஷின் பெயரை அவர் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X