ஐஸ்வர்யா ரஜினி இன்ஸ்டாகிராம் போஸ்ட்... கவனத்தை பெற்ற காஸ்ட்லி வாட்டர் பாட்டில்!
சென்னை : இயக்குநராக மீண்டும் களமிறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்ட அவர், தற்போது பாலிவுட்டில் ஓ சாதி செல் என்ற படத்தை இயக்கவுள்ளார். அதற்கான பணிகளையும் முடுக்கியுள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

மீண்டும் களத்தில் ஐஸ்வர்யா ரஜினி
இயக்குநராக மீண்டும் களமிறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. சமீபத்தில் முஷாபிர் என்ற இசை ஆல்பத்தை 4 மொழிகளில் சூப்பர்ஸ்டார் ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்களை கொண்டு வெளியிட்டார். இதையடுத்து பாலிவுட்டில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பையும் மேற்கொண்டுள்ளார்.

பாலிவுட்டில் படம்
ஓ சாதி செல் என்ற இந்தப் படத்தை இயக்கவுள்ளார். தமிழில், சிம்பு, லாரன்ஸ் உள்ளிட்டவர்களுடன் படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல லாரன்ஸ் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் இளையராஜாவையும் சமீபத்தில் சந்தித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.

விரைவில் சூட்டிங்
இதையடுத்து அவரது படத்தில் இளையராஜா இசையமைப்பாரா என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் ஐஸ்வர்யா ஈடுபட்டுள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆண்டிவாக உள்ளார்.

வொர்க் அவுட் வீடியோக்கள்
தினந்தோறும் தான் செய்யும் வொர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். நேற்றைய தினமும் தான் சைக்கிளிங் செய்யும் வீடியோவையும் பதிவிட்டிருந்தார். அதை தொடர்ந்து தான் அமர்ந்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

காஸ்ட்லி புரோட்டீன் வாட்டர்
இந்த புகைப்படத்தை காட்டிலும் அவரது கையில் இருந்த அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுகுறித்த ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். புரொட்டீன் பவுடர் கலக்கப்பட்டுள்ள அந்த அரை லிட்டர் வாட்டர் பாட்டிலின் விலை 150 ரூபாய் மட்டுமே.

அரைலிட்டர் 150 ரூபாய்?
இதையடுத்து அரைலிட்டர் வாட்டர் 150 ரூபாயா என்று ரசிகர்கள் வாய் பிளந்து வருகின்றனர். சூப்பர்ஸ்டார் மகள் எவ்வளவு ரூபாய்க்கு வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்தின்மீது கவனம் செலுத்திவந்த ஐஸ்வர்யா, தற்போது தனுஷுடனான பிரிவுக்கு பிறகு தனது கேரியரில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











