எதையும் தூக்கிப் போட விருப்பம் இல்லையாம் ஐஸ்வர்யா ரஜினிக்கு.. இன்ஸ்டாகிராமில் அவரே போட்ட பதிவு!
சென்னை : இயக்குநர் மற்றும் பிரபல நடிகர் ரஜினியின் மகள் என்ற அந்தஸ்தோடு வலம் வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி.
3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் திரைக்கதை பாராட்டுக்குள்ளானது.
தற்போது தன்னுடைய 18 ஆண்டு திருமண பந்தத்தை முறிக்கும் முடிவை எடுத்துள்ள ஐஸ்வர்யா ரஜினி, தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
இயக்குநர் மற்றும் பிரபல நடிகர் ரஜினியின் மூத்த மகள் என்ற அந்தஸ்தோடு பிரபல நடிகர் தனுஷின் மனைவி என்ற கௌரவத்துடன் வலம் வந்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ரஜினி, தனது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தனுஷ் -ஐஸ்வர்யா பிரிவு முடிவு
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினியின் இந்த முடிவு அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினியின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முடிவால் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலை அடைந்ததாகவும் அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சிகள் பல கட்டங்களில் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

கேரியரில் பிசி
ஆனால் ஐஸ்வர்யாவும் சரி, தனுஷும் சரி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர். தங்களது கேரியரை நோக்கிய பயணத்தில் மிகவும் மும்முரமாக இருந்து வருகின்றனர். தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான அவரது திருச்சிற்றம்பலம் படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் படம் அறிவிப்பு
இதனிடையே முபாஷிர் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா, தொடர்ந்து பாலிவுட்டில் தனது படத்தின் அறிவிப்பை செய்துள்ளார். இந்தப் படம் அறிவிப்போடு உள்ள நிலையில், தன்னுடைய உடல்நலன் மனநலன் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவோடு காணப்படும் ஐஸ்வர்யா, அதிகமான வொர்க் அவுட் வீடியோக்கள், கோயில் விசிட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து தன்னுடைய மகன்கள் மீதும் அதிக அக்கறையை செலுத்தி வருகிறார். அவரது உலகம் மாற்று வழியில் பயணம் செய்யத் துவங்கியுள்ளது.

புதிய இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில் ஸ்பைரல் செய்யப்பட்ட சில கோப்புகளை காட்டும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் காகிதத்தில் கதை எழுதுவதும், அதை தட்டச்சு செய்து, அதில் தொடர்ந்து மாற்றங்களை செய்வதும் வழக்கம் என்றும் அந்தத் தாள்களை பிற்காலங்களில் பார்க்கும்போது அதிலிருந்து எதையும் தூக்கிப் போட மனம் வராது என்றும் கூறியுள்ளார்.

திரைக்கதை குறித்த பதிவு
ஒவ்வொரு முறை அதை படிக்கும்போதும் புதிதாக எதையாவது சேர்க்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியாது என்றும் சூட்டிங் நடக்கும் வரை அதில் புதிதாக சேர்க்கும் இந்த எண்ணம் மாறாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஐஸ்வர்யா தற்போது தன்னுடைய பாலிவுட் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











