லிங்கா என்னோட இடது கண்.. அப்போ வலது கண்? ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்ட மகிழ்ச்சிப்பதிவு!
சென்னை : இயக்குநரும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக காணப்படுகிறார்.
இவரது இரண்டாவது மகன் லிங்காவின் 12வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் லிங்கா குறித்த மகிழ்ச்சியான பதிவை தனது இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் என்ற பெருமையையும் கொண்டுள்ளவர் ஐஸ்வர்யா ரஜினி. பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் தனுஷை பிரியும் முடிவை இவர் வெளியிட்டிருந்தார்.

கேரியரில் கவனம்
இந்த பிரிவு கோலிவுட்டில் தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் 3 படத்திற்கு பிறகு தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளிடம் அக்கறை செலுத்திவந்த ஐஸ்வர்யா ரஜினி, தனது கேரியரில் கவனம் செலுத்தினார். முஷாபிர் என்ற இசை ஆல்பத்தை உடனடியாக இயக்கி வெளியிட்டார்.

பாலிவுட்டில் படம்
தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் தான் இயக்கும் படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். முன்னதாக சிம்புவை வைத்து இவர் படமியக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடனான ஐஸ்வர்யாவின் சந்திப்பு அவர்கள் இருவரும் இணைந்து படம் செய்ய உள்ளதாக யூகங்களை கிளப்பின.

விரைவில் சூட்டிங்
ஆனால் பாலிவுட்டில் தனது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஐஸ்வர்யா. இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்துவரும் சூழலில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் ஐஸ்வர்யா வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பிசி
தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னை பிசியாக்கிக் கொண்டுள்ள ஐஸ்வர்யா ரஜினி, தினந்தோறும் பிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். ஹெவியான வொர்க் அவுட்களை மேற்கொண்டும் வருகிறார். சைக்கிளிங் உள்ளிட்டவற்றை அவர் மேற்கொள்ளும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

குழந்தைகளிடம் அக்கறை
தன்னுடைய குழந்தைகள் மீதும் அதிகமான அக்கறை செலுத்திவரும் ஐஸ்வர்யா, அவர்கள் தன்னுடைய வாழ்க்கையின் மையம் என்பதை அடிக்கடி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி அவரது இரண்டாவது மகன் லிங்காவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வீடியோக்களை வெளியிட்டு தன்னுடைய மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லிங்காவின் பிறந்தநாள் பதிவு
மேலும் லிங்காவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு அனைவரையும் கவரும்வகையில் காணப்படுகிறது. மேலும் தன்னுடைய இடது கண் லிங்கா என்றும் ஐஸ்வர்யா இந்தப் பதிவில் கூறியுள்ளார். அப்போ யாத்ரா அவருடைய வலது கண் என்பது சொல்லாமல் தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











