மகளாக... தாயாக... அடுத்தடுத்த பதிவுகள்... இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ரஜினி உருக்கம்!

சென்னை : இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுடனான விவாகரத்து முடிவுக்கு பிறகு அதிரடியாக பல செயல்களை செய்து வருகிறார். பாலிவுட்டில் தனது புதிய படத்தின் அறிவிப்பையும் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனுஷை வைத்து இயக்கிய 3 என்ற படத்தின்மூலம் சிறந்த இயக்குநராக அறியப்படுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நாயகியாக ஷ்ருதிஹாசன் மற்றும் தனுஷின் நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினி.

விவாகரத்து அறிவிப்பு

விவாகரத்து அறிவிப்பு

இந்தப் படம் வசூல்ரீதியாக கைக்கொடுக்கவில்லை என்ற போதிலும் விமர்சனரீதியாக வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 7 ஆண்டுகளாக இயக்கத்தில் ஈடுபடாமல் குடும்பத் தலைவியாகவே இருந்து வந்தார் ஐஸ்வர்யா ரஜினி. இதனிடையே சமீபத்தில் தனுஷுடனான விவாகரத்து அறிவிப்பை அவர் மேற்கொண்டார்.

இசை ஆல்பம் வெளியீடு

இசை ஆல்பம் வெளியீடு

இதையடுத்து தன்னுடைய கேரியரை நோக்கிய பயணத்தில் அவர் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். சமீபத்தில் முஷாபிர் என்ற இசை ஆல்பத்தை 4 மொழிகளில் வெளியிட்டார். தமிழில் பயணி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை சூப்பர்ஸ்டார் ரஜினி வெளியிட்டார். ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார்.

பாலிவுட்டில் படம் அறிவிப்பு

பாலிவுட்டில் படம் அறிவிப்பு

இந்நிலையில் தமிழில் அவர் படத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாலிவுட்டில் தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் முன்னேற்பாட்டு பணிகளை அவர் தற்போது செய்துவரும் நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து அவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் மற்றும் தனது குடும்பத்தினருடன் தான் செலவழிக்கும் தருணங்களை பதிவிட்டு வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய சகோதரி மகனின் பிறந்தநாளையொட்டி அழகான பதிவை அவர் வெளியிட்டிருந்தார்.

ஒளியேற்றிய அன்னை

ஒளியேற்றிய அன்னை

இந்நிலையில், நேற்றைய தினம் அன்னையர் தினத்தையொட்டி தன்னுடைய அன்னை லதா ரஜினிகாந்த்துடன் தான் தீபாவளிக் கொண்டாட்டத்தில் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடை வாழ்க்கையில் ஒளியேற்றிய அவருக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

சூப்பர் ஹீரோக்கள்

சூப்பர் ஹீரோக்கள்

இதேபோல தன்னை அன்னையாக்கி அழகு பார்த்துவரும் தனது மகன்களுக்கும் அவர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்த தனிப் பதிவில், தன்னுடைய சூப்பர் ஹீரோக்கள், தன்னுடைய நண்பர்கள், தன்னுடைய ரத்தம், தன்னுடைய சுவாசம் என்று தன் மகன்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மகன்களுக்கு பக்கபலம்

மகன்களுக்கு பக்கபலம்

தனுஷுடனான பிரிவு அறிவிப்புக்கு பிறகு அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினி இருந்து வருகிறார். அவர்களுக்கு இந்த தருணத்தில் பக்க பலமாக இருக்க வேண்டியதன் தேவையை அவர் அறிந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X