என் முடிவுக்கு என் மகன்கள்தான் முக்கிய காரணம்... எதப்பத்தி சொல்றாங்க ஐஸ்வர்யா ரஜினி?

சென்னை : இயக்குநரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினியின் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களில் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த பல அப்டேட்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

விவாகரத்து முடிவு

விவாகரத்து முடிவு

நடிகர் தனுஷ் உடனான விவாகரத்து முடிவை சமீபத்தில் அறிவித்தார் ஐஸ்வர்யா தனுஷ். இந்த முடிவு அவருடைய குடும்பத்தினர் மட்டுமின்றி கோலிவுட்டிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள் இருவரும் இதுகுறித்த தங்களது எந்தவிதமான வெளிப்பாட்டையும் காட்டாமல் தங்களது கேரியரை நோக்கிய பயணத்தை தொடர்ந்தனர்.

தனுஷின் மாறன் படம்

தனுஷின் மாறன் படம்

தனுஷின் மாறன் படம் சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். ஹாலிவுட்டில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள தி க்ரே மேன் படம் வரும் ஜூலையில் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

வீடியோ ஆல்பம் வெளியிட்ட ஐஸ்வர்யா

வீடியோ ஆல்பம் வெளியிட்ட ஐஸ்வர்யா

இதேபோல ஐஸ்வர்யா ரஜினியும் தனது கேரியரை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்தியுள்ளார். கொரோனாவால் அவதிப்பட்டாலும் அவர் முஷாபிர் என்ற இசை ஆல்பத்தை சமீபத்தில் 4 மொழிகளில் வெளியிட்டார். இதையடுத்து ஓ சாதி செல் என்ற பாலிவுட் படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது முடிவுக்கு மகன்களே காரணம்

தனது முடிவுக்கு மகன்களே காரணம்

இந்நிலையில் சமீபத்திய அவரது பேட்டியில் தான் கடந்த 7 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்ததற்கு காரணம் தன்னுடைய மகன்கள்தான் என்று தெரிவித்துள்ளார். அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்ற காரணத்தினால்தான் தான் சினிமாவில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷை போன்ற மகன்

தனுஷை போன்ற மகன்

18 ஆண்டுகள் மனமொத்த தம்பதிகளாக தங்களை வடிவமைத்துக் கொண்டவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. அவர்களுக்கு அழகான இரு மகன்களும் உள்ளனர். சமீபத்தில் இளையராஜா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்களது மூத்த மகன் அனைவரையும் கவர்ந்தார். தனுஷை போலவே அவர் உள்ளதாக கூறப்பட்டது.

Recommended Video

Rajkamal | Latha Rao | எங்க வீட்டு Bathroom கதை | Filmibeat Tamil
சாதாரண அம்மா

சாதாரண அம்மா

இந்நிலையில் இவர்களது பிரிவு அடலசன்ட் பருவம் என்று கூறப்படும் அவர்களது வாழ்க்கையில் கண்டிப்பாக சஞ்சலங்களையும் உளைச்சல்களையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தன்னுடைய குழந்தைகளுக்காக தன்னுடைய கேரியரை பற்றிக் கவலைக் கொள்ளாத ஒரு சாதாரண அம்மாவாகவே ஐஸ்வர்யா இருந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X