ஐஸ்வர்யா ரஜினிக்கு இந்த விஷயம் ரொம்ப வாட்டத்தை கொடுக்குதாம்... கஷ்டம்தான்!
சென்னை : இயக்குநரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் என்ற இமேஜையும் ஒருசேர பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. கடந்த 7 ஆண்டுகளாக இவர் இயக்கத்தை மேற்கொள்ளவில்லை. தற்போது தனுஷ் உடனான பிரிவு அறிவிப்புக்கு பிறகே இவருக்கு மீண்டும் இயக்குநர் அவதாரம் சாத்தியமாகியுள்ளது.
Recommended Video

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி தன்னுடைய முன்னாள் கணவர் தனுஷ், ஷ்ருதிஹாசன் உள்ளிட்டவர்களை வைத்து 3 என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் விமர்சனரீதியாக அவருக்கு கைக்கொடுத்தது. ஆனால் தன்னுடைய குடும்பம், குழந்தைகள் என்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவிற்கு அடுத்தடுத்தப்படங்கள் சாத்தியப்படவில்லை.

தனுஷ் உடன் பிரிவு அறிவிப்பு
இந்நிலையில் தனுஷ் உடனான தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முடிவை சமீபத்தில் தனுஷுடன் இணைந்து வெளியிட்டார் ஐஸ்வர்யா. இதனால் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இவர்களை மீண்டும் இணைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இசை ஆல்பம் வெளியிட்ட ஐஸ்வர்யா
ஆனால் இவை எதுவும் பலனளிக்கவில்லை. மாறாக இருவரும் தங்களது கேரியரை நோக்கிய பயணங்களில் பிசியாக உள்ளனர். முஷாபிர் என்ற இசை ஆல்பத்தின் மூலம் தன்னை மீண்டும் இயக்குநராக வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா. இதைத் தொடர்ந்து பாலிவுட் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பிசி
சமூக வலைதளங்களிலும் தன்னை தொடர்ந்து பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்களில் அவர் மிகவும் ஹெவியாக வொர்க் அவுட் செய்வதை பார்க்க முடிகிறது.

கவனத்தை திசைத்திருப்பிய ஐஸ்வர்யா
தன்னுடைய கவனத்தை தொடர்ந்து தனது கேரியர், குழந்தைகள் மற்றும் இத்தகைய வொர்க் அவுட்கள் என்று திசைத்திருப்பும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருவது இதன்மூலம் தெரிகிறது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் மற்றும் ஷட்டல் விளையாடும் வீடியோவில் மிகவும் அதிகமான உழைப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

புழுக்கத்தை தந்த வெயில்
ஞாயிற்றுக்கிழமை இரவில் தான் செய்யும் இந்த பயிற்சிகள் தனக்கு மிகவும் புழுக்கத்தையும் வாட்டத்தையும் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வெயில்காலம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆயினும் தன்னுடைய பயிற்சிகளை அவர் விடாமல் உள்ளார்.


Click it and Unblock the Notifications











