லிங்கா எடுத்த க்யூட் போட்டோ.. அவருக்குள்ள எவ்ளோ அழகான திறமையா.. வியக்கும் ரசிகர்கள்!
சென்னை : இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினி கடந்த ஜனவரியில் தனுஷுடன் பிரிவு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தினர்.
இதனிடையே தன்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட்களின் மூலம் தன்னுடைய மகன்கள் மீது தன்னுடைய அன்பை அதிகமாக வெளிப்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
இயக்குநராக இரண்டு படங்களை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. பிரபல நடிகர் ரஜினியின் மூத்த மகள், அதேபோல பிரபல நடிகரின் மனைவி என்ற அடையாளத்துடன் முடங்கிக் கொள்ளாமல் 3 மற்றும் வை ராஜா வை என்ற இரு படங்களை இயக்கி தன்னுடைய சுயத்தை வெளிப்படுத்தினார்.

அதிர்ச்சிக்குள்ளாக்கிய முடிவு
ஆனாலும் குடும்பம், குழந்தைகள் அவரது முதல் சாய்சாக இருந்ததால் தொடர்ந்து படங்களை இயக்கவில்லை. இந்நிலையில் நடிகர் தனுஷுடன் தனது விவாகரத்து அறிவிப்பை கடந்த ஜனவரியில் வெளியிட்டார். இருவரும் கூட்டாக இந்த விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அவர்களின் இந்த முடிவு திரையுலகினரை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.

கேரியரில் கவனம்
அவர்களை சேர்த்து வைக்கும் குடும்பத்தினரின் முயற்சி கைக்கூடாமல் போன நிலையில், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனுஷின் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதேபோல ஐஸ்வர்யாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசை ஆல்பம் ஒன்றை 4 மொழிகளில் வெளியிட்டு அசத்தினார்.

படமியக்கும் ஐஸ்வர்யா ரஜினி
தொடர்ந்து பாலிவுட்டில் தான் இயக்கவுள்ள படம் குறித்தும் அறிவிப்பு வெளியிட்டார். இதனிடையே வொர்க்அவுட் மற்றும் தன்னுடைய மகன்கள் என்று தன்னுடைய விருப்பப்பட்டியல்களை அதிகரித்துள்ளார். தன்னுடைய தந்தையுடன் அடிக்கடி இவரை காண முடிகிறது. சமீபத்தில் டெல்லிக்கும் சென்று வந்தார்.
Recommended Video

லிங்கா எடுத்த புகைப்படம்
இந்நிலையில் தான் பிசியாக வேலையில் கவனம் செலுத்திய நிலையில், தன்னுடைய மகன் லிங்கா தன்னை எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் மிகவும் ப்ரொபஷனலாக எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லிங்கா சிறந்த ஒளிப்பதிவாளராக மாறுவார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











