இப்படித்தான் என்னோட ஞாயிறு துவங்கும்... சூப்பர் சண்டே வீடியோ பதிவிட்ட ஐஸ்வர்யா ரஜினி!

சென்னை : இயக்குநரும் சூப்பர்ஸ்டார் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக காணப்படுகிறார். தன்னை பல விதங்களிலும் பிசியாக வைத்துக் கொண்டு வருகிறார். அவரது இந்த மாற்றங்கள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து வருகிறது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி, தனது விவாகரத்து குறித்த அறிவிப்பிற்கு பிறகு தன்னை மற்ற விஷயங்களில் மிகவும் பிசியாக வைத்துக் கொண்டு வருகிறார். தனுஷுடனான தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் அவரை வைத்து 3 படத்தை இயக்கினார்.

இயக்கத்தை தவிர்த்த ஐஸ்வர்யா

இயக்கத்தை தவிர்த்த ஐஸ்வர்யா

இந்தப் படம் விமர்சன ரீதியாக சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை இயக்கி 9 ஆண்டுகள் ஆகின்றன. சமீபத்தில் இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா, தனது மகன்களுடன் சிறப்பான பொழுதை போக்க வேண்டியே தான் படங்களை இயக்காமல் இருந்ததாக தெரிவித்திருந்தார்.

இசை ஆல்பம் வெளியீடு

இசை ஆல்பம் வெளியீடு

இந்நிலையில் தற்போது விவாகரத்து முடிவிற்கு பிறகு உடனடியாக இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார். நான்கு மொழிகளில் இந்த வீடியோவை ரஜினி உள்ளிட்டவர்கள் கைகளால் வெளியிட்டிருந்தார். தற்போது பாலிவுட்டில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

தொடர்ந்து சோஷியல் மீடியாவிலும் தன்னை மிகவும் ஆக்டிவாக வைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். வொர்க் அவுட் வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய ஞாயிற்றுக்கிழமை எப்படி துவங்கும் என்பது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சண்டே வீடியோ வெளியீடு

சண்டே வீடியோ வெளியீடு

அதில் ஜிம்மில் பல வொர்க் அவுட்களை வியர்க்க விறுவிறுக்க செய்கிறார். எனர்ஜி பானம் குடிக்கிறார். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார். காபி குடிக்கிறார். இப்படித்தான் தனது ஞாயிற்றுக்கிழமை காலை விடியும் என்று அந்த வீடியோவில் கேப்ஷனும் வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் ஹாப்பி சண்டே என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X