மீண்டும் ஹெவி வொர்க் அவுட்.. தெறிக்கவிடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீடியோ பதிவு!

சென்னை : இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக காணப்படுகிறார்.

சமீபத்தில் நடிகர் தனுஷுடனான பிரிவை இவர் அறிவித்தார். இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொடர்ந்து தன்னுடைய வேலை, குழந்தைகள், சமூக வலைதளங்களில் பிசியான செயல்பாடு என்று தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தன்னுடைய கணவர் தனுஷை பிரியும் முடிவை சமீபத்தில் வெளியிட்டார். இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்த போதிலும் அவர்களின் இந்த முடிவு குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வேலைகளில் பிசி

வேலைகளில் பிசி

இதையடுத்து இது குடும்ப சண்டைதான். இருவரும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான வேலைகளில் குடும்பத்தினர் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் இருவரும் இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர். தொடர்ந்து தங்களது வேலைகளில் பிசியாக உள்ளனர்.

மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினி

மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினி

சமீபத்தில் தி க்ரே மேன் படத்தின் ப்ரமோஷனுக்காக அமெரிக்கா சென்ற தனுஷ், தன்னுடைய மகன்களையும் உடன் அழைத்து சென்றார். அவர்கள் சென்னை திரும்பியவுடன், அவர்களை கட்டித்தழுவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வரவேற்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

பிசியான ஐஸ்வர்யா ரஜினி

பிசியான ஐஸ்வர்யா ரஜினி

தன்னுடைய குழந்தைகள், தன்னுடைய வேலை மற்றும் வொர்க் அவுட், சமூக வலைதளப் பக்கங்களில் பிசியான செயல்பாடு என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். அவர் தற்போது பாலிவுட்டில் படம் இயக்க உள்ளார். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அறிவித்திருந்தார்.

வொர்க் அவுட் வீடியோ

வொர்க் அவுட் வீடியோ

தொடர்ந்து தன்னுடைய மகன்களுடன் தான் இருக்கும் புகைப்படங்களையும், தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இதன்மூலம் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து வொர்க் அவுட் வீடியோக்களை பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினி, தற்போது மீண்டும் தான் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்

ரசிகர்கள் கமெண்ட்

இந்த வீடியோவில் அவர் மிகவும் ஹெவியாக வொர்க் அவுட் செய்கிறார். இந்த வீடியோவை பார்க்கும்போது, தங்களுக்கும் உத்வேகமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவில் வெளியிலிருந்து வரும் நெகட்டிவிட்டி தன்னை பாதிக்காத வகையில் தான் இருப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X