இந்த சந்திப்புக்கு அப்புறமா மூளை வேகமா வேலை செய்யுது... அப்படி யாரை சந்திச்சாங்க ஐஸ்வர்யா ரஜினி!
சென்னை : இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது முசாபிர் இசை ஆல்பத்தை விரைவில் வெளியிடும் வேலைகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதத்திலேயே இந்த ஆல்பம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் ஐஸ்வர்யா பாதிக்கப்பட்டதையடுத்து ரிலீஸ் தள்ளிப் போனது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்க்கையில் சமீபத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக அவருக்கும் நடிகர் தனுஷிற்கும் இடையிலான 18 ஆண்டுகால வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ளது. சமீபத்தில் இருவரும் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்து அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

விவாகரத்து முடிவு
இதையடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது கேரியரை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் சூட்டிங்கில் பிசியாக உள்ளார். அவரது நடிப்பில் மாறன் படம் ரிலீசாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

முசாபிர் இசை ஆல்பம்
இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தற்போது முசாபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த ஆல்பம் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டியும் இம்மாதம் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டியும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இடையில் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இதன் ரிலீஸ் தள்ளிப் போனது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
இந்நிலையில் தற்போது முசாபிர் ஆல்பத்தின் வெளியீட்டிற்கான பணிகளில் ஐஸ்வர்யா பிசியாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இதன் சூட்டிங் புகைப்படங்களையும் டீசரையும் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக அவர் செயல்பட்டு வருகிறார்.

ஐஸ்வர்யாவை சந்தித்த லாரன்ஸ்
இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்து முசாபிர் குறித்து விஷயங்களை கேட்டறிந்தார். மேலும் அவருக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

வேகமாக செயல்படும் மூளை
மேலும் இந்த சந்திப்பால் சுவாரஸ்யமான ஒன்று உருவாகிறது என்று தெரிவித்துள்ளார். அன்பான அண்ணனை சந்தித்த பிறகு மூளை இன்னும் வேகமாக செயல்படுவதாவும் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினியின் ஆஸ்தான ரசிகராக ராகவா லாரன்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











