ஐஸ்வர்யா ரஜினிகாந்தை குஷிப்படுத்தும் விஷயம்... என்ன சொல்றாங்கன்னு பாருங்க!
சென்னை : இயக்குனரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீப காலங்களில் சிறப்பாக தன்னுடைய பணிகளில் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் தனுஷ் உடனான இவரது விவாகரத்து முடிவுக்கு பிறகு இவரது செயல்பாடுகளை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
தற்போது முசாபீர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வருகிறார். தமிழில் இது பயணி என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து 3 என்ற படத்தை தனது கணவர் மற்றும் ஸ்ருதி ஹாசனை வைத்து இயக்கியிருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தால் அடுத்தடுத்த முயற்சிகளை இவர் மேற்கொள்ளவில்லை.

தனுஷுடன் விவாகரத்து முடிவு
இதனிடையே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து முடிவை அறிவித்திருந்தனர். இந்த முடிவு சினிமா வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் மனமொத்து பிரிவதாகவும் தங்களது தனிமனித சுதந்திரத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சிறப்பான கேரியர் பயணம்
தற்போது தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது கேரியரை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது முசாபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கிவருகிறார். தமிழில் பயணி என்று இந்த ஆல்பத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஆல்பம் வெளியிடப்பட உள்ளது.

ஆல்பத்தின் கிளிம்ப்ஸ்
முன்னதாக இந்த ஆல்பத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த ஆல்பம் நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து சிம்புவை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஐஸ்வர்யாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது அவர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார்.

சூட்டிங்கில் மீண்டும் பங்கேற்பு
இதையடுத்து வெளியில் வந்த அவர் தற்போது முசாபிர் சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
Recommended Video

பூக்கள் பூக்கும் தருணம்
இந்நிலையில் தற்போது தான் பூங்கொத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் பூக்களைப் போல பெண்களை சந்தோஷப்படுத்தும் விஷயம் எதுவும் இல்லை என்றும் தனது கேப்ஷனில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இவரின் இன்ஸ்டாகிராமில் பாலோயர்கள் 5 லட்சத்தை தாண்டியுள்ளதையொட்டி இவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











