என்ன இவ்ளோ பாஸ்ட்டா இருக்காங்க... பாலிவுட்டில் படமியக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
சென்னை : இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய சினிமா கேரியரை நோக்கிய பயணத்தில் மிகவும் பிசியாக காணப்படுகிறார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் இசை ஆல்பம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்தியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
சூப்பர்ஸ்டாரின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது கணவர் தனுஷை வைத்து 3 என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. படத்தின் ஒய் திஸ் கொலவெறி மாஸாக அமைந்தது. அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது.

விவாகரத்து முடிவு
தொடர்ந்து அவர் படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது குடும்பத்தினரை கவனிக்கும் பொருட்டு படங்களை இயக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது தனது கணவர் தனுஷுடனான விவாகரத்து முடிவை சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து அவர் தனது கேரியரை நோக்கிய பயணத்தை விரைவு படுத்தியுள்ளார்.

முசாபிர் இசை ஆல்பம்
சமீபத்தில் அவரது இயக்கத்தில் முசாபிர் என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. தமிழில் பயணி என்று இதற்கு பெயரிடப்பட்டிருந்தது. தமிழில் இந்த ஆல்பத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். மேலும் தனது மகளின் இந்த பயணத்திற்கு அவர் வாழ்த்துக்களும் தெரிவித்திருந்தார்.

எளிமையான காதல்
இதேபோல தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிகளில் இந்த ஆல்பம் பிரபலங்களை கொண்டு வெளியிடப்பட்டது. எளிமையான காதலை மையமாக கொண்டு வெளியான இந்த ஆல்பம் பலதரப்பினரையும் கவர்ந்தது. இதையடுத்து அவர் சிம்பு மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் இணைந்து படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

பாலிவுட் படம் அறிவிப்பு
இதுகுறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்பட்டனர். இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் படம் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஓ சாதி சல் என்று அந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. தற்போது படத்திற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

போஸ்டர் வெளியீடு
இந்தப் படத்தின் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். காதல் கதையாக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்தப் படம் மூலம் அவர் இந்தியில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். படத்தை க்ளவுட் 9 பிக்சர்ஸ் சார்பில் மீனு அரோரா தயாரிக்கவுள்ளார். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











