எப்பா தல ரசிகாஸ், யாரு பார்த்த வேலப்பா இது...: டூ... டூ மச்
சென்னை: அஜீத் ரசிகர்கள் செய்துள்ள ஒரு வேலை பலரையும் கடுப்பாக்கியுள்ளது.
அஜீத் ரசிகர்கள் தல மீது அதிக பாசம் வைத்துள்ளனர். அவரின் பிறந்தநாளைக்கு மட்டும் அல்லாமல் ஷாலினி அவர்களின் பிள்ளைகளின் பிறந்தநாளுக்கும் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள், கேக் கட் பண்ணுகிறார்கள்.

இந்நிலையில் அஜீத்தின் மகள் அனௌஷ்காவின் பிறந்தநாள் வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. மதுரையை சேர்ந்த அஜீத் ரசிகர்கள் அம்மா ஜெயலலிதா போன்று அனௌஷ்காவை சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதில் எதிர்கால தங்கத் தாரகையே என்று வாசகம் வேறு. அம்மா உருவத்தில் அனௌஷ்காவை பார்த்தவர்கள் இந்த தல ரசிகர்களுக்கு வேறு வேலையே இல்லப்பா என்கிறார்கள்.
அடுத்த மாதம் தான் பிறந்தாள் என்றாலும் இரண்டு வாரங்களுக்கு முன்பே போஸ்டர் அடித்து ஒட்டத் துவங்கிவிட்டனர். ஆட்டோக்கள், சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











