சென்னை மாலில் விஜய் 'ஐயா' சேதுபதி மெழுகுச் சிலை: பிடிச்சிருக்கு ஆனால் பிடிக்கல
Recommended Video

சென்னை: சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் விஜய் சேதுபதியின் ஐயா கதாபாத்திரம் மெழுகுச் சிலையாக வைக்கப்பட்டுள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மகேந்திரன், அர்ச்சனா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ள சீதக்காதி படம் வரும் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்த படக்குழு சூப்பர் முறையை கையாண்டுள்ளது.

மெழுகுச் சிலை
சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் சீதக்காதி படத்தில் வரும் ஐயா கதாபாத்திரத்தின் மெழுகுச் சிலையை வைத்துள்ளனர். அந்த சிலையை மூத்த இயக்குனரும், நடிகருமான மகேந்திரன் திறந்து வைத்தார். சிலை பார்க்க அச்சு அசலாக ஐயா மாதிரியே உள்ளது. சிலையை செய்தவருக்கு பாராட்டுக்கள்.

விளக்கம்
தலைப்பில் சிலை பிடிச்சிருக்கு ஆனால் பிடிக்கல என்று தெரிவித்துள்ளதற்கு காரணம் உண்டு. அதாவது விஜய் சேதுபதியை நேரில் பார்க்கும் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க கேட்டால் உடனே சம்மதம் தெரிவிப்பார். மேலும் ரசிகனின் கன்னத்தில் பாசத்துடன் முத்தம் கொடுப்பார். சிலையுடன் செல்ஃபி எடுக்க முடியும் ஆனால் முத்தம் கிடைக்காதே. அதனால் தான் பிடிச்சிருக்கு பிடிக்கல.

விஜய் சேதுபதி
சீதக்காதி படத்தை விளம்பரம் செய்ய படக்குழு அருமையான யுக்தியை கையாண்டுள்ளது. மாலுக்கு வரும் மக்கள் நிச்சயம் ஐயா சிலையுடன் செல்ஃபி எடுப்பார்கள். செல்ஃபி எடுப்பவர்கள் சும்மா இருப்பார்களா, அதை விஜய் சேதுபதியை டேக் செய்து, #seethakaathi என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். ஆக, படத்திற்கு மக்களே இலவச விளம்பரம் கொடுக்கிறார்கள்.

2.0
2.0 படத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. அதனால் அதற்கு மக்களே இலவச விளம்பரம் அளிப்பார்கள் என்றார் ரஜினி. அதற்கு விளம்பரம் கிடைத்தது போன்று சீதக்காதிக்கும் மக்களே விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பேஷ் பேஷ் சூப்பர் ஐடியா ரொம்ப நல்லா இருக்கு.


Click it and Unblock the Notifications











