அஜய் – அர்ச்சனாவின் மதுரை மாவேந்தர்கள்!

By Mayura Akilan

அஃகு பட ஹீரோ அஜய் நடிக்கும் புதிய படம் மதுரை மாவேந்தர்கள். காதல் சென்டிமெண்ட் நிறைந்த காரசாரமான படம் என்கின்றனர் படத்தின் தயாரிப்பாளர்கள்.

டி.மாதுரி பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் சார்பில் டி.மயூரன் தயாரிக்கும் மதுரை மாவேந்தர்கள் படத்தில் அஜய்க்கு ஜோடியாக, 'பொங்கி எழு மனோகரா' படத்தின் நாயகி அர்ச்சனா நடிக்கிறார். இவர்களுடன் அப்புகுட்டி, காதல் சுகுமார், பாண்டு, தேவதர்ஷினி, விஜய் ஆனந்த், பூவிலங்கு மோகன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

Ajai hero in Madurai Mavendarkal

எஸ்.கார்த்திக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பைஜூ ஜேக்கப் இசையமைக்கிறார். ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வி.கே.விஜய்கண்ணா.

ஏமாந்த இளைஞர்கள்

"பண பலமும் அதிகார பலமும் உள்ள ஒரு தொழிலதிபரால் நான்கு இளைஞர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த இளைஞர்கள் அதிகார பலமிக்க தொழிலதிபரிடமிருந்து இழந்ததை எவ்வாறு மீட்டுக் கொள்கிறார்கள் என்பதுதான் கதை என்கிறார் இயக்குநர் விஜய் கண்ணா.

காதலும் உண்டு

இந்தப் படத்தில் காதல் நகைச்சுவை சென்டிமெண்ட், பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைய உள்ளது என்கிறார் இயக்குநர் விஜய் கண்ணா.

மதுரை களம்

மதுரை, சென்னை போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது பாண்டிச்சேரி, சாலக்குடி போன்ற இடங்களின் இப்படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

மூன்று படங்களில் அஜய்

புதுமுகமாக சினிமாவில் அறிமுகமாவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே சிரமமாக இருக்க, அந்த வாய்ப்பும் கிடைத்து, தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே மேலும் இரண்டு படங்களில் வாய்ப்புகளை பெற்று, தற்போது ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் புதுமுக ஹீரோ அஜய்.

அஃகு, கலைவேந்தன்

'அஃகு' என்ற படத்தின் மூலம் நாயகனாக நடிக்க ஆரம்பித்த அஜய், அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, ‘கலை வேந்தன்' என்ற படத்தின் வாய்ப்பை பெற்று நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

மூன்றாவது படம்

தொடர்ந்து மூன்றாவதாக ‘மதுரை மாவேந்தர்கள்' என்ற படத்திலும் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் ரொமான்ஸ், பைட் காட்சிகளில் அசத்தியிருக்கிறாராம்.

நாயகி அர்ச்சனா

இந்தப் படத்தின் நாயகி அர்ச்சனா ஏற்கனவே பொங்கி எழு மனோகராவில் இர்பான் ஜோடியாக நடித்துள்ளார். இப்போது புதுமுக ஹீரோ அஜய் உடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X