»   »  கன்னடத்து "காதல்" நாயகியின்.... மாமா .. ஐ லவ் யூ.....!

கன்னடத்து "காதல்" நாயகியின்.... மாமா .. ஐ லவ் யூ.....!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கன்னடத்து "காதல்" நாயகி அமுல்யா அடுத்து ஒரு செம ஹாட்டான ரொமான்டிக் படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தில் அவருடன் ஜோடி சேரவிருப்பது அஜய் ராவ்.

செலுவின சித்தாரா என்ற படத்தில் நடித்துப் பிரபலமானவர் அமுல்யா. இந்தப் படம் நம்ம தமிழில் வெளியான காதல் படத்தின் ரீமேக் ஆகும்.

எப்படி தமிழ் ரசிகர்களை சந்தியா வசீகரிக்க வைத்தாரோ இந்தப் படத்தின் மூலம், அதேபோல கன்னடத்து ரசிகர்கள் மனதில் தங்கிப் போனவர் அமுல்யா. இவரும் அஜய் ராவும் இணையப் போகும் புதிய படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாம்.

மாமா ஐ லவ்யூ

மாமா ஐ லவ்யூ

இந்த இருவரும் இணையப் போகும் புதிய படத்தின் பெயர் மாவா ஐ லவ் யூ (மாமா, ஐ லவ் யூ). இந்தப் படத்தில் அமுல்யாவுடன் இணைந்து நடிக்கவிருப்பதை அஜய் ராவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

லீலையின் நாயகன்

லீலையின் நாயகன்

அஜய் ராவ் இதற்கு முன்பு நடித்த கிருஷ்ண லீலா அங்கு பிரபலமான படம். பெரும் வெற்றி பெற்ற படமும் கூட. எனவே இவர் மீதான எதிர்பார்ப்பும் கன்னட ரசிகர்களிடையே கலந்து கட்டிக் காணப்படுகிறது.

செம கெமிஸ்ட்ரி

செம கெமிஸ்ட்ரி

கிருஷ்ண லீலா படத்தில் அஜய் ராவுடன் இணைந்து ஜோடி போட்டவர் மயூரி. இருவரும் இணைந்த முதல் படம் இது என்றாலும் கூட கெமிஸ்ட்ரி, பயாலஜி, பிசிக்ஸ், ஜியாகிரபி என எல்லாமே செமையாக ஒத்துப் போய் "ஹிஸ்டரி"யே படைத்து விட்டனர் இருவரும்.

அடுத்தது அமுல்யா

அடுத்தது அமுல்யா

இந்த நிலையில் அடுத்து அமுல்யாவுடன் இணைகிறார். அமுல்யாவுடன் அவர் இணைவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாயகனை அலைய விட்டவராச்சே

நாயகனை அலைய விட்டவராச்சே

செலுவின சித்தாரா படத்தில் காதலித்த நாயகன் கடைசியில் பைத்தியமாகிப் போய், மாமனை கட்டிக் கொண்டு கலங்கிப் போகும் காதலி வேடத்தில் அமுல்யா சிறப்பாக நடித்திருந்தார். எனவே அவரும், அஜய் ராவும் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்க்கலாம்.. "மாவா" மயக்குகிறாரா இல்லையா என்று...!

English summary
Actor Ajai Rao will romance Cheluvina Chittara actress in the upcoming movie 'Mava I Love You'. Yes, if we have to believe the alleged reports from Gandhinagara, Ajai is planning for his next venture, after the huge success of Krishna Leela.
Please Wait while comments are loading...